தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு ஷாக்! ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை பார்த்தீங்களா
சென்னை: தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்ப இன்று ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால், ரயில் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. டோல்கேட்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இயக்கியது.

அதேபோல, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் மட்டும் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. விடுமுறை முடிந்து நாளை வேலை நாள் என்பதால் சென்னைக்கு திரும்ப மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
சொந்த வாகனங்களில் சென்ற பயணிகள் பலரும் இன்று காலையே சென்னை திரும்பி வருவதை பார்க்க முடிகிறது. இதனால், டோல்கேட்டுகளில் வாகன நெரிசல் காணப்படுகிறது. தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் நேற்றில் இருந்தே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரையில் இருந்து முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது.
அரசு பஸ்கள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கிறார்கள். ஆனால் இப்படி கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும், படுத்து தூங்கி செல்லும் பஸ்களில் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோல, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை உள்ளிட்ட இடங்களில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதிகபட்சமாக 3,500 முதல் 4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் ரெட் பஸ் உள்ளிட்ட ஆப்களில் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக ஊருக்கு சென்று வரவேண்டும் என்பதால் பொதுமக்கள் அதிக கட்டணத்தையும் செலுத்தி பயணித்து வருகின்றனர்.
இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்தனர். எனினும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், "அரசிடம் நாங்கள் அளித்து இருக்கும் கட்டண பட்டியலின் படியே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக" சொல்கிறார்கள்.
பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளதகாவும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி சில ஆம்னி பஸ்கள் கட்டணம் வசூலிக்கின்றன என ஆதங்கம் தெரிவித்த பயணிகள், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications