Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி பண்டிகை: டோல்கேட்களில் நெரிசல் ஏற்பட்டால் கட்டணத்தை ரத்து பண்ணிடுங்க! அதிகாரிகளுக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து, இலவசமாக வாகனங்களை செல்ல அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்க்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

diwali deepavali national highway

அதே போல, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து வாகனங்களை தவிர கார்கள், பைக்குகள் என சொந்த வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளையில் இருந்தே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவக்கும் என்பதால் டோல்கேட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் , ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் இப்படி பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. சுங்கசாவடிகளில் பாஸ்ட் டேக் ஸ்கேன் சில நிமிடங்கள் தாமதம் ஆனால் கூட நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து விடுகின்றன.

இதனால், டோல்கேட்களில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, கூட்ட நெரிசல் நேரங்களி கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேஷனல் ஹைவே மண்டல தலைமையகத்தில் இருந்து டோல்கேட் மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் கூறிய தகவல் வருமாறு:- "சுங்க சாவடிகளில் எந்த பகுதியில் இருந்து வாகனனங்கள் அதிக அளவில் வருகிறதோ.. அந்த பகுதியில் வசூல் கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும். ஸ்கேன் செய்யும் கருவிகளை கூடுதலாக பயன்படுத்த வேண்டும். இதற்காக கூடுதல் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


ஆயுத பூஜை பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. எனவே, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் கட்டனம் இல்லாமல் வாகனங்களை செல்ல அனுமதிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.

சிறப்பு பேருந்துகள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும், பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் என ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்ப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருப்பூர், கோவை என பல்வேறு நகரங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+