தீபாவளி ஓவர்.. ஆனாலும் இன்று "டபுள் குஷி".. தமிழ்நாடு முழுக்க அரசு விடுமுறை! பள்ளி, கல்லூரி இயங்காது
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது.
தீபாவளி பண்டிகை விடுமுறை
நாடு முழுவதும் தீபாவளி நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சில மாநிலங்களில் கலாச்சார காரணங்களால் இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடுவது வழக்கம்.

இந்த முறை தீபாவளி கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட கோலாகலமாக இருந்தன. மக்களிடம் அதிகரித்த பணப்புழக்கம் இதற்கு முக்கிய காரணம். தமிழர்கள் இட்லி, கோழிக்கறி குழம்பு முதல் புதிய ஆடைகள், மதிய உணவுக்கு சிக்கன் குழம்பு என பாரம்பரிய முறையில் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளியை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியாகின. தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்வர் ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப் போனால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக இந்த போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்த தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம், தமிழ்நாடு வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்பட்டது. உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்பட்டது. 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெற்றனர்.
தமிழ்நாடு முழுக்க விடுமுறை
இந்த போனஸ் பல குடும்பங்களின் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. மேலும், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை கடந்த வாரம் வழங்கப்பட்டது, இது பண்டிகைக் காலச் செலவுகளுக்கு உதவியாக இருந்தது.
அக்டோபர் 20 அன்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை, இன்று, அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தது. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது.
விரைவில் அடுத்த அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு பின்பாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும். தமிழக அரசும் இதே அளவு அகவிலைப்படியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வருவது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications