நாளை தீபாவளி.. இந்த 2 விஷயத்தை மிஸ் பண்ணாதீங்க.. தமிழ்நாடு மின்சாரத்துறை சொன்ன முக்கிய அட்வைஸ்
சென்னை: தீபாவளி இடையே தமிழ்நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கியமான அறிவுரைகளை வழங்கி உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் செய்துள்ள போஸ்டில், TANGEDCO-வின் #Safeதீபாவளி | மின் கம்பங்கள் அருகில் மற்றும் மின் கம்பிகள் செல்லும் பாதையில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்கவும். பாதுகாப்பாக தீப ஒளி 🪔 திருநாளை கொண்டாடுவோம், என்று கூறியுள்ளனர்.

அதேபோல் TANGEDCO மொபைல் செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் யுபிஐ (UPI) வாயிலாக, ரசீது பதிவிறக்கம் செய்யலாம், வாட்ஸ்அப்பில் அனுப்பலாம். தீபாவளி சமயத்தில் மறக்காமல் பில் கட்டவும், என்று குறிப்பிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.
1. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
2. மின் கட்டணம் 500 தாண்டும் பட்சத்தில் தானாக பதிவு செய்யப்பட்ட போன் எண்களின் வாட்ஸ் ஆப்களுக்கு பில் சென்றுவிடும்.
3. அப்படி இல்லாத பட்சத்தில் வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு இருக்கும்.
4. எண் 94987 94987 என்பதை உறுதி செய்து அதில் கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும்.
இந்த பில் கட்டணத்தில் க்யூ ஆர் கோடு இருக்கும். இந்த க்யூ ஆர் கோடை கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ சாதனங்களில் ஸ்கேன் செய்தால் போதும் தானாக அதன் மூலம் பணம் செலுத்திவிட முடியும்.
யாருக்கு பொருந்தும்; இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
மின்தடை இருக்காது: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படியே இந்த வருடம் கோடை காலத்தில் பெரிதாக மின் தடை ஏற்படவில்லை., அதேபோல் தீபாவளி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக 'மின் தடை' இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
மின்சார துறை முக்கிய அறிவிப்பு: அதேபோல் இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.












Click it and Unblock the Notifications