தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ431.03 கோடிக்கு மதுவிற்பனை- மதுரை மண்டலம் டாப்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ431.03 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில்தான் அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கொடி கட்டிப் பறப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

ரூ431 கோடிக்கு மதுவிற்பனை
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் அதாவது கடந்த 3-ந் தேதி மொத்தம் ரூ205.61 கோடிக்கும், தீபாவளியான நேற்று 4-ந் தேதி ரூ225.4 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த நாட்களில் மட்டும் ரூ431..03 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

மதுரை மண்டலம் டாப்
இதில் 2 நாட்களில் மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ99 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மண்டலத்தில் ரூ79.84 கோடி; திருச்சி மண்டலத்தில் ரூ89.95 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தீபாவளி சேல்ஸ்
தீபாவளி நாளன்று மட்டும் மதுரையில் ரூ51.68 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி நாளில் திருச்சி மண்டலத்தில் ரூ47.57 கோடிக்கும் சேலம் மண்டலத்தில் ரூ46.62 கோடிக்கும் சென்னை மண்டலத்தில் ரூ41.84 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கோவை மண்டலத்தில் குறைந்த அளவாக ரூ37.71 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஒப்பீட்டளவில் குறைவு
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ465 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டும் மதுரை மண்டலத்தில் அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு மதுரை மண்டலத்தில் ரூ103.82 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை ரூ36.66 கோடி குறைந்துள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை 4 நாட்கள் விடுமுறையுடன் கடந்து செல்கிறது. இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களில் ரூ1,000 கோடி மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போதைய நிலையில் 2 நாட்களில் ரூ431 கோடி மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. எதிர்பார்த்தபடியே தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மதுவிற்பனை இருந்ததாகவும் டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications