தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ466 கோடிக்கு மது விற்பனை- மதுரையில்தான் கன ஜோர்!
சென்னை: தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
Recommended Video

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் விலைக்கும் மதுவிற்பனை தொடருகிறது.

ரூ466 கோடிக்கு விற்பனை
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தில்தான் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது.

திருச்சியில் ரூ95.47 கோடி விற்பனை
2-வது இடத்தில் திருச்சி மண்டலம் உள்ளது. திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ95.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3-வது இடத்தில் சென்னை மண்டலம் உள்ளது.

சென்னையில் ரூ94.36 கோடி
சென்னை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ94.36 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் 2 நாட்களில் ரூ455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

ரூ8 கோடி விற்பனை
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 222 டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் நேற்று தீபாவளி பண்டிகையான ஒரே நாளில் சுமார் ரூ 8 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி உள்ளது. முந்தைய நாளில் ரூ 5 கோடி மட்டுமே விற்பனையான நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை ரூ8 கோடிக்கு மது விற்பனையானது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications