இளைஞர் சமுதாயத்தின் ‘5ஜி’- ஐந்தாம் தலைமுறை எழுச்சி வீரர் - அமைச்சர் உதயநிதிக்கு கி.வீரமணி வாழ்த்து!
சென்னை: தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு 5ஜி- ஐந்தாம் தலைமுறை எழுச்சி வீரர் என பட்டம் சூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
தமிழக அமைச்சராக திமுகவின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்த வாழ்த்து: துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அவர்கள் இன்று (14.12.2022) 'திராவிட மாடல்' அமைச்சரவையில் ஓர் அங்கமாக ஆகி, அமைச்சர் பொறுப்பை ஏற்க மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிந்துரைத்து, அப்பொறுப்பை ஏற்கிறார்!
தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் பேரன்பினை தமது கடமையாற்றும் தொண்டுமூலம் அவர்தம் உள்ளம் கவர்ந்துள்ளார்!
இளைஞர்களுக்குக் கொள்கையைச் சொல்லி, ''திராவிட இயக்க நாற்றுகளான'' அவர்களை வளர்க்க, தக்கவர்களைக் கொண்டு கொள்கைப் பாசறைக் கூட்டங்கள்மூலம் திராவிட இயக்கத் தத்துவ வகுப்புகளை நடத்தி, விரும்பத்தக்க அரிய சாதனை செய்து வருவது பாராட்டுக்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக சீரிய பகுத்தறிவுக் கொள்கையாளர். அடக்கமாகப் பழகும் பண்பு அவரது உடைமைகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே!
43 ஆவது வயதில் தனது தாத்தா 'முத்தமிழ் அறிஞர்' கலைஞர் அவர்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்றதுபோல, தனது 45 வயதில் அரசியல் பயிற்சிக் களத்தில் புதிய முக்கியப் பொறுப்பை ஏற்கிறார்!
இத்தலைமுறை இளைஞர்களுக்குள்ள ஆற்றல் தங்களது வாய்ப்பு வெளிச்சத்தின் (Exposure) மூலம் வெளிப்படல் மிக அதிகம்.

அவ்வகையில், அவர் பக்குவப்பட்டே இந்தப் பொறுப்பை ஏற்கிறார்! ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரக் களத்தில் வென்று காட்டியதோடு, மக்களுக்குப் பதியும் வண்ணம் கருத்துகளைக் கூறி வாக்காளர்களை ஏற்க வைத்த திறமையாளர்! இவரை 'வாரிசு அரசியல்' என்ற முத்திரையினால் ஒதுக்கிடுவது, விமர்சிப்பது - ஒன்று அறியாமை; இன்றேல் ஆணவப் பொறாமை! அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று! எதைப்பற்றியும் பகுத்தறிவு மனப்பான்மையோடு பார்த்து, கவலைப்படாமல், தடைக்கற்களைத் தாண்டும் நெஞ்சுரத்தோடு அவர்தம் அரசியல் பயணம் அடுத்த மைல்கல்லாகத் தொடரட்டும்! தகுதியானவரை அடையாளம் கண்டு பொறுப்பில் அமர்த்தும் 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' நம் முதலமைச்சருக்கு நமது பாராட்டுகள்!
புதிய பொறுப்பேற்று தனித்த முத்திரை பதித்து வரலாறு படைக்கட்டும்! இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி வீரரான - '5ஜி' (அய்ந்தாம் தலைமுறை) என்று நம்மால் முன்பே அழைக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் இனிய வாழ்த்துகள்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications