DMDK: நாள் குறித்தும் நடக்கலையே! தேமுதிகவுக்கு சான்ஸ்! நாளையாவது பிரேமலதா அறிவிப்பாரா?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேமுதிக கூட்டணி அறிவிப்பு குறித்து அரசியல் வட்டாரங்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய நாள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால் தேமுதிக தனது நிலைப்பாட்டை பிப்.16-ஆம் தேதி அறிவிக்குமா? அல்லது 22-ஆம் தேதி அறிவிக்குமா? என்பது தான் இப்போது ஹாட் டாப்பிக்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி" என்று பிப்.12-ஆம் தேதி சென்னையில் பேட்டியளித்தார். அதிமுக, திமுக இரண்டு பக்கமும் பேச்சு நடக்கிறது என்பது தவறான தகவல் என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி உறுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால், பிப்.16-ஆம் தேதி (வார இறுதி) அறிவிப்பு வரலாம் என சிலர் ஊகிக்கின்றனர்.
திமுக தரப்பு
ஆனால், திமுக தரப்பில் இருந்து வெளியான தகவல்கள் வேறு கதை சொல்கின்றன. திமுக கூட்டணி பேச்சுவார்த்தை கமிட்டி பிப்.22-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 7-10 சட்டமன்ற இடங்கள் + ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக தயாராக இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.
முதல் முறை கூட்டணி
இதுவரை திமுக உடன் முதல் முறை கூட்டணி வாய்ப்பு என்பதால், பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதிமுக கூட்டணி
அதிமுக தரப்பில் இருந்து எந்த உறுதியான சிக்னலும் இல்லை. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "தேமுதிக உடன் பேச்சு இல்லை" என்று தெளிவாகக் கூறியுள்ளார். இதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
தவெக கட்சி
விஜயின் தவெக கட்சி தனித்து போட்டியிடும் என்பதால், தேமுதிக போன்ற சிறு கட்சிகளின் கூட்டணி முடிவு வாக்கு பிரிப்பில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும். இந்த சஸ்பென்ஸ் எப்போது முடியும்? பிரேமலதா சொன்னது இறுதி வாக்காளர் பட்டியலுக்கு ஒரு நாள் முன்பு கூட்டணி குறித்து வெளியிடப்படும் என்றார். அப்படி பார்த்தால் 16 ஆம் தேதி!
22 ஆம் தேதி
ஆனால் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாள் முன்பு என பார்த்தால் 22 ஆம் தேதி. எனவே 16-ஆம் தேதி தேமுதிக யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வந்தால், அது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். இல்லையெனில், 22-ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தையில் தான் தீர்மானம் உறுதியாகும்! தமிழக அரசியல் ரசிகர்கள் காத்திருப்பில் 22 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கூட்டணி குறித்து முடிவு
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், தேமுதிக இது போல் நாட்களை கடத்துவதன் மூலம் கூட்டணிக்கான டிமான்ட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஒரு வேளை கூட்டணி குறித்து ஏற்கெனவே முடிவு செய்திருந்தால் சொன்னபடி நாளை வெளியிட வேண்டும். நாளை முகூர்த்த நாள், வெளியிடலாம். ஒரு வேளை பேரத்தை அதிகரிக்க விரும்புவதாக வைத்துக் கொண்டால் அந்த கட்சிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் ஒரு சாக்காக மாறி தற்போது இன்னும் ஒரு வாரம் இழுத்தடிக்க நல்ல சான்ஸாக கிடைத்துள்ளது. எனவே நாளை பிரேமலதா என்ன அறிவிக்கிறார் என்பதை பார்க்கலாம் என தெரிவித்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications