பிடிவாதம் காட்டும் தேமுதிக.. முடங்கிய திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை.. என்ன நடந்தது?
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில், தங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் என்று தேமுதிக கடுமையாகப் பேரம் பேசி வருவதால், கூட்டணி இறுதி செய்யப்படுவது தாமதமாகிறது. ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி பேசி வரும் தேமுதிகவால் இருகட்சிகளும் டென்ஷனாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுகவும், அதிமுகவும் பலமான கூட்டணியை அமைத்துள்ளன. சீமானின் நாம் தமிழர் தனித்து களமிறங்குகிறது. விஜயின் தவெக கூட்டணிக்கு பிற கட்சிகளை அழைத்தாலும் இன்னும் யாரும் செல்லவில்லை. இதற்கிடையே தான் விஜயகாந்தின் தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

தேமுதிகவை இழுக்க திமுக மற்றும் அதிமுகவினர் முயன்று வருகின்றனர். ஆட்சியை இழக்க கூடாது என்பதில் திமுக காட்டும் முனைப்பும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவின் எண்ணமும் தான் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க போராடுவதன் பின்னணியாகும்.
பிடி கொடுக்காத தேமுதிக
ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக, அதிமுக என்று இருகட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார். பிரேமலதா விஜயகாந்த் இருகட்சியினரும் இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வெளிப்படையாக 20 சீட்டுகளை ஒதுக்கினால் கூட்டணி என்று பேசி வருகிறார்.
0.4 சதவீதம் தான் வாக்கு
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக வெறும் 0.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இருப்பினும் தங்களுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறி விஜய பிரபாகரன் இப்படி பேசி வருகிறார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அனுதாப அலையில் தேமுதிகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
பேரத்தில் பேசுவது என்ன?
கடந்த சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி - தோல்விகள் வெறும் 5,000 வாக்குகள் அல்லது அதற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தீர்மானிக்கப்பட்டது. இதில் பல தொகுதிகளில் தேமுதிக அதனை விட கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தது. இதனால் எங்களை கூட்டணியில் இணைக்கும் கட்சி வெற்றி பெறும் என்று தேமுதிக கூறி பேரம் பேசி வருகிறது.
திமுக - அதிமுக நிலைப்பாடு?
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் உள்ளன. இப்போது மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. இதனால் தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க திமுக தயங்குகிறது.
அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த முறை இருந்த கட்சிகளுடன் இப்போது புதிதாக அமமுக மீண்டும் இணைந்துள்ளது. இதனால் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் சுணக்கம்
இருப்பினும் இதனை திமுக, அதிமுக கட்சிகள் ஏற்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் 0.4 சதவீத வாக்குகள் உள்ள கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் ஒதுக்கி, ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என்று கூறியுள்ளன.
இருப்பினும் தேமுதிக இறங்கி வராமல் பிடிவாதம் பிடித்து நிற்கிறது. இதனால் தேமுதிக தனது செல்வாக்கை தாண்டி எதிர்பார்க்கிறது என்று திமுக, அதிமுகவினர் கூறி வருவோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணங்கி உள்ளது.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications