Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர். முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் வங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை அசுர பலத்துடன் உள்ள திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது.

DMDK Allocated 10 Seats in DMK Alliance Seat-Sharing Agreement Signed In Chennai

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, முஸ்லிம் லீக்-2, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி- 2, மனிதநேய மக்கள் கட்சி- 2, ம.தி.மு.க- 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 என ஒதுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டி இருந்தது.

இதில் விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை இலக்கில் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று அந்த கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 6 தொகுதியில் போட்டியிட்ட விசிக 2 பொது தொகுதியலும் 2 தனி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கும் இன்றே தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக முயற்சித்து வந்தது.

தேமுதிகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

அதன்படி இன்னும் சற்று நேரத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக கூட்டணியில் முதல் முறையாக தேமுதிக இணைந்துள்ளதால், அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்காக மாலை 7 மணியளவில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். தொடந்து பிரேமலதா விஜயகாந்தும் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். இதனை தொடர்ந்து திமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அதிக தொகுதிகளை பெற்ற கட்சியாக தேமுதிக உள்ளது.

இரு நாட்களில் தொகுதி விவரம் வெளியாகும்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ”விரைவில் களப்பணியை தொடங்குவோம்.. எல்லாரும் கேட்டுக்கொண்டே இருந்தீங்க.. இன்றை தொகுதி பங்கீடு நிறைவு பெற்றிருக்கிறது. எங்களுக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாளுக்கு இந்த பத்து தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரமும் வெளியாகும்.

எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். கேப்டன் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி உள்பட எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை நாங்கள் உத்தேச பட்டியலாக திமுகவிடம்ம் கொடுத்து இருக்கிறோம்.” என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+