Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்டிஏ தலைவர்களுடன் தேமுதிக.. நிர்மலா சீதாராமனை சந்தித்த எல்.கே.சுதீஷ்.. மாறுகிறதா கூட்டணி கணக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்து வரும் ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் பங்கேற்று இருக்கிறார். கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேமுதிக நெருக்கம் காட்டி வந்த நிலையில், திடீரென பாஜக தலைவர்களுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் ஃபீவர் இப்போதே தொடங்கிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதேபோ அதிமுக கூட்டணியில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை இணைக்க எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டினார். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருபடி கூட இறங்கி வரவில்லை.

DMDK Ally Signals Confusion

அதுமட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் அப்போது அதிமுக சார்பாக உறுதி அளிக்கப்பட்ட ராஜ்ய சபா சீட், இந்த ஆண்டு அளிக்கப்படவில்லை. அது அடுத்த ஆண்டு நிச்சயமாக அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் சில மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது டிஆர் பாலு, எல்கே சுதீஷை தம்பி என்று அழைத்து நெருக்கம் காட்டி இருந்தார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரடியாக அவரது வீட்டிற்கே பிரேமலதா விஜயகாந்த் சென்றார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையப் போவதாக பார்க்கப்பட்டது.

மதிமுக தரப்பில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனையறிந்த ஸ்டாலின், தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க முடிவு செய்தார். இதன் காரணமாக தேமுதிக - திமுக இடையிலான நெருக்கம் அதிகரித்தது. அதற்கேற்ப திமுக ஆட்சியை பிரேமலதா கடுமையாக விமர்சிப்பதை தவிர்த்து வந்தார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் எந்த விமர்சனமும் வைக்கவில்லை.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியும் பிரேமலதாவை சந்தித்து ஆலோசனை செய்திருந்தார். இதன்பின் தேமுதிகவின் கூட்டணி முடிவு ஜனவரி 9 கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்து வரும் ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட பின், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் கலந்து கொண்டார். அவருக்கு நிர்மலா சீதாராமன் அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற குழப்பம் அக்கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

திமுகவுடன் பிரேமலதா நெருக்கம் காட்டி வரும் சூழலில், எல்கே சுதீஷ் பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இதனால் பிரேமலதா என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் என்டிஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது முதல்முறையாக திமுக கூட்டணிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+