மார்ச் 5ல் முக்கிய ஆலோசனை.. விஜயகாந்த் அதிரடி அழைப்பு.. தேமுதிக கூட்டணி இறுதியாகிறது?
தேமுதிக சார்பாக மார்ச் 5-ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: தேமுதிக சார்பாக மார்ச் 5-ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தேமுதிகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேமுதிக இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இது தொடர்பாக அதிமுகவினர் கடந்த சில நாட்களாக தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதில் இதுவரை உடன்படிக்கை ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிக சார்பாக மார்ச் 5-ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை அதே நாளில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications