அனைவரையும் மேடை ஏற்ற திட்டம்.. பாஜக பிளான்.. நாளை மோடி பங்கேற்கும் சென்னை கூட்டத்தில் விஜயகாந்த்?

நாளை சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

v

சென்னை: நாளை சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று தேமுதிக இன்னும் எந்த விதமான முடிவையும் எடுக்கவில்லை. அதிமுகவுடன் தேமுதிக ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் எந்த விதமான பலனையும் அளிக்கவில்லை. பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை அடுத்து இந்த இழுபறி முடிவிற்கு வரும் என்று கூறுகிறார்கள்.

பாஜக

பாஜக

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சென்னையில் வண்டலூரில் நடக்க உள்ளது. இதற்கான பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள எல்லா தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணியும் இதில் கலந்து கொள்ள உள்ளார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் இணைவது குறித்து தேமுதிக முடிவு செய்துவிட்டது என்று கூறுகிறார்கள். நாளை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்து இருக்கிறார். தேமுதிக கூட்டணி குறித்து நாளை அறிவிப்போம் என்று அவர் தேமுதிக தொண்டர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேடை ஏறுவார்

மேடை ஏறுவார்

இதனால் நாளை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று கூறுகிறார்கள். எல்லா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்வதால் விஜயகாந்தும் இந்த விழாவில் கலந்து கொள்வார். அதிமுகவும், பாஜகவும் இது தொடர்பான அழைப்பை விஜயகாந்திற்கு அளிக்கும் என்று கூறுகிறார்கள்.

நாளை

நாளை

இதனால் இன்று இரவோ நாளை காலையோ தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். அதாவது பிரதமர் மோடி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் அதிமுக கூட்டணி இறுதியாக வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதனால்தான் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக விஜயகாந்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+