மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின் விஜயகாந்த் வெளியிட்ட முதல் அறிக்கை! என்ன சொல்லி இருக்கார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தே வந்தார். அரசியல் பணிகள் அனைத்தையும் அவரது மனைவி பிரேமலதா தான் கவனித்து வந்தார்.

 DMDK chief Vijayakanth thanked those who prayed for his speedy recovery

கடந்த மாதம் 18ஆம் தேதி விஜயகாந்த்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அங்கே சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை: அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவே தேமுதிக தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. இருப்பினும், இடையில் மியாட் மருத்துவமனை, விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை இப்போது சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த அறிக்கை பலருக்கும் வேதனையைக் கொடுத்தது. அவர் விரைவில் நலம் பெறப் பலரும் பிரார்த்தனை செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க இணையத்தில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் செயற்கை சிகிச்சை தரப்படுவதாகவும் எல்லாம் தகவல்கள் உலா வந்தன. அதை முற்றிலுமாக மறுத்த பிரேமலதா, விஜயகாந்த் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறினார். மேலும், அவருடன் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்தார்.

விஜயகாந்த் டிஸ்சார்ஜ்: இருப்பினும், தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் உலா வந்த நிலையில், கேப்டன் மீது இருக்கும் வன்மம் காரணமாகவே இதுபோன்ற தகவல்களைச் சிலர் பரப்புவதாகவும் அவர் நல்ல நிலையிலேயே இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். மேலும், ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிவித்தார். இந்தச் சூழலில் இன்று திங்கள்கிழமை விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

அவர் பூரண நலம்பெற்று டிஸ்சார்ஜ் ஆனதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் நலம் பெறப் பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு அவரது பெயரில் வெளியாகும் முதல் அறிக்கை இதுவாகும்.

விஜயகாந்த் அறிக்கை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பூரண நலம்‌ பெற வேண்டி வாழ்த்திய திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும்‌, அரசியல்‌ கட்சி பிரமுகர்களுக்கும்‌, தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும்‌, கழக நிர்வாகிகள்‌, கழகத்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌, எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்‌" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+