தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார்.. டிஸ்சார்ஜ் எப்போது? பரபர தகவல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே அவர் பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இதற்கிடையே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை சீராகவே இருந்து வந்த நிலையில், இடையில் திடீரென மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாகச் சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் விஜயகாந்த் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும், அவரது உடல்நிலை குறித்தும் பல வித தகவல்கள் பரவியது. இதற்கிடையே அந்த வதந்திக்குள் எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக அவரை பற்றி செய்திகள் உலா வந்து கொண்டே இருந்தது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்குப் புரியவில்லை.. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் எனப் பல முறை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.. ஆனாலும் சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை அல்லது அதிகபட்சம் வரும் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications