Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TN Election 2026: தமிழகத்திலேயே Luckiest கட்சி தேமுதிகதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் அதிர்ஷ்டசாலி தேமுதிகதான். ஏற்கெனவே ஒரு எம்பி பதவி கிடைத்த நிலையில் தற்போது ஒரு எம்எல்ஏ பதவியும் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அவர் மட்டும் விருத்தாசலம் தொகுதியில் வென்றார்.

dmdk tamil nadu assembly election 2026

விஜயகாந்தை சாதாரணமாக நினைத்திருந்த நிலையில் அந்த கட்சியின் செயல்பாட்டை பார்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அவருடன் கூட்டணி வைக்க முயற்சித்தது. இதில் அதிமுகவே வென்றது.

2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 44 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது. அப்போது தேமுதிகவை விட திமுக பெரும் தோல்வி அடைந்த நிலையில் தேமுதிகவே எதிர்க்கட்சியானது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சட்டசபையில் விஜயகாந்த் மோதல் போக்கில் இருந்த நிலையில் அந்த கூட்டணி முறிந்தது.

அதன் பிறகு 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக களமிறங்கியது. அப்போது ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. அப்போதும் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டும் தோல்விதான் நடந்தது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென பிரேமலதாவும் சுதீஷும் அறிவாலயம் சென்று திமுகவுடன் கூட்டணி அமைத்தனர்.

10+1 தொகுதிகள்

தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சிக்கு 10 தொகுதிகளும் 1 ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைத்தது. அந்த கூட்டணியில் நீண்டகாலமாக பயணித்து வந்த தேர்தல் அங்கீகாரம் கொண்ட மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி!

இதன் மூலம் திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது தேமுதிக! தம்பி சுதீஷ் எம்பியான நிலையில் மகிழ்ச்சி அடைந்த பிரேமலதா, விருத்தாசலம் தொகுதியில் களம் காண்கிறார். அது போல் மகன் விஜயபிரபாகரனை விருதுநகரில் இறக்கியுள்ளார்.

இவர்கள் போட்டியிடும் 10 தொகுதிகளில் எந்த மாதிரியான நிலை என்பதை விட விருத்தாசலம் தொகுதியின் எம்எல்ஏவாக பிரேமலதா நிச்சயம் ஆவார் என களநிலவரம் சொல்கிறது.

யார் எல்லாம் போட்டி

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிகவின் பிரேமலதா, பாமக அன்புமணியின் டாக்டர் எழிலரசி ஆகியோருக்கு இடையேதான் போட்டி! ஏனென்றால் இருவரும் திமுக, அதிமுக என்ற பெரிய கட்சிகளின் கூட்டணியில் களம் காண்கிறார்கள்.

பிரேமலதாவுக்கு சாதகம்

விருத்தாசலம் தொகுதியில் வன்னியர்களும் பிற்படுத்தப்பட்டோரும் வசிக்கிறார்கள். கூட்டணி கட்சியினரின் ஆதரவு வாக்குகள் தேமுதிகவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள். அத்துடன் சொந்த கட்சியினரின் வாக்குகளும் கிடைக்கும்.

இந்த தொகுதியில் திமுக, அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சி அதிக முறை வென்றுள்ளது. கடந்த முறையும் காங்கிரஸ்தான் வென்றுள்ளது. இதனால் அதிமுக இந்த தொகுதியில் போட்டியிடாதது தேமுதிகவுக்கு பிளஸ் ஆகிவிடுகிறது.

பாமகவின் பாதகம்

அது போல் பிரேமலதாவை எதிர்த்து போட்டியிடுவது டாக்டர் எழிலரசி. இவர் அன்புமணி பாமகவை சேர்ந்தவர். இந்த தொகுதியில் ஏற்கெனவே பாமக ஒரே ஒரு முறை மட்டுமே போட்டியிட்டுள்ளது.

மற்றபடி திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இரு முறை தேமுதிக வென்றுள்ளது. பாமக தற்போது பிளவுபட்டுள்ளதால் டாக்டர் எழிலரசியின் வெற்றி வாய்ப்பு என்பது சந்தேகத்திற்குரியது என்கிறார்கள்.

பிரேமலதாவுக்கு லக்

இதனால் பிரேமலதாவுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. ஏற்கெனவே ஒரு எம்பி பதவி கிடைத்துவிட்ட நிலையில் நிச்சயம் ஒரு எம்எல்ஏ பதவியும் உறுதியாகவிட்டது என்றே சொல்கிறார்கள்.

திமுக கூட்டணியில் புதிதாக இணைந்ததும் 10 தொகுதிகள்+ 1 ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளது. விருத்தாசலத்தில் அதிமுக போட்டியிடாததால் பிரேமலதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கூட இந்த சான்ஸ் கிடைக்கவில்லை. எனவே தமிழகத்திலேயே தேமுதிகதான் அதிர்ஷ்டசாலி கட்சி எனலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+