கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு ஆதரவு.. விஜயகாந்த் பரபர அறிக்கை
Recommended Video
சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு, தேமுதிக தொண்டர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டணிக்குள் குழப்பம் நிலவியதாக கூறப்பட்ட நிலையில், விஜயகாந்த் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில், 4 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இதேபோல திமுகவும் நான்கு தொகுதிகளிலும், போட்டியிடுகின்றன.
|
தேமுதிக மீது எதிர்பார்ப்பு
இந்த நிலையில், லோக்சபா தேர்தலின்போது தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், அதிமுக போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று முணு முணுப்பு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. எனவே 4 தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஜயகாந்த் இன்று ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் அறிவிப்பு
இதுதொடர்பாக, தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஆதரவை அளிக்கிறது.

கூட்டணி தர்மம்
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேமுதிகவுக்கு நல்ல வாக்கு வங்கியுள்ளது. சூலூரிலும் அக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. விஜயகாந்த் தெரிவித்துள்ள இந்த ஆதரவால் அதிமுக தரப்பு குஷியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications