ஒருவழியாக முடிவுக்கு வந்தது ஒப்பந்தம்.. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக- அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது. தேமுதிகவுக்கு 60 கூட்டணிகளை டிடிவி தினகரன் ஒதுக்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்டது தேமுதிக. ஆனால் அதிமுகவோ அத்தனை தொகுதிகளை ஒதுக்க முடியாது என தெரிவித்துவிட்டது. இதையடுத்து பாமகவுக்கு ஒதுக்கியது போல் 23 அல்லது 25 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டது.

ஆனால் அதிமுகவோ 14 முதல் 18 வரை மட்டுமே கொடுக்க முடியும். அதற்கு மேல் ஒரு சீட்டு கூட கொடுக்க இயலாது என சொல்லிவிட்டது. இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாக தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் அமமுக- தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமமுக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதனால் தேமுதிக தனித்து களம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அமமுக- தேமுதிக இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் டிடிவி தினகரனும் பிரேமலதா விஜயகாந்தும் கையெழுத்தினர்.

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் தொகுதிகளும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications