தேமுதிக வேஸ்ட் லக்கேஜ்? ஸ்டாலின் சாதித்தாரா..சறுக்கினாரா? கூட்டணிக்கு குமுறும் தலைகள்..ரிசல்ட் என்ன?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், தேமுதிக வரவு, திமுக கூட்டணிக்கு வலு சேர்க்குமா, அல்லது கூட்டணிக்குள் சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஏற்கனவே திமுக கூட்டணியில் தேவைக்கும் அதிகமாக கட்சிகள் இருக்கும் நிலையில், தேமுதிக என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை என்கின்றனர்.
2005ஆம் ஆண்டு மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, திமுக மற்றும் அதிமுகக்கு மாற்றாக உருவான கட்சியாக ஆரம்பத்திலேயே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது. ஆரம்பத்தில் இரட்டை இலக்க ஓட்டுப் பெற்ற அந்தக் கட்சி, பின்னர் தவறான கூட்டணி முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றங்களால் படிப்படியாகச் சுருங்கியது.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவிலான ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது. கட்சியின் தலைவரான விஜயகாந்தின் மரணத்துக்குப் பின்னும், தலைமை மாற்றத்திற்குப் பிறகு அதன் அரசியல் செல்வாக்கு குறைந்ததாகவும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேமுதிக திமுக கூட்டணி
இந்த சூழலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது கூட்டணியின் வாக்கு பரப்பை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. கூட்டணியில் புதிய கட்சி சேர்வது சில பகுதிகளில் உள்ள ஆதரவுகளை ஒருங்கிணைக்க உதவலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் தேமுதிக ஆதரவாளர்கள் உள்ளதாக கூறப்படுவதால், அந்தப் பகுதிகளில் கூட்டணிக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
தேமுதிக
ஆனால், இதற்கு மாறான கருத்துகளும் வெளிப்படுகின்றன. திமுகவிடம் பல தொகுதிகளை கோரி பட்டியல் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் சில தற்போதைய திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, நெய்வேலி, கடலூர், மதுரை தெற்கு உள்ளிட்ட தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவினர் அதிருப்தி
இந்த தொகுதிகள் கூட்டணிக்குள் பகிர்வு செய்யப்படுமானால், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் 'சிட்டிங்' உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகும் வாய்ப்பு உள்ளது என கட்சித் தரப்பில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு சிக்கல்கள் ஏற்பட்டால், தேர்தல் பணிகளில் தாக்கம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. வட மாவட்டங்களில் முன்பு நேருக்கு நேர் அரசியல் போட்டியில் இருந்த கட்சித் தரப்பினருக்கிடையே ஒத்துழைப்பு எளிதாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரே மேடையில் இணைந்து பணியாற்றும் சூழலில் நிலப்பரப்பு அரசியல் சமநிலையை பராமரிப்பது சவாலாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.
கூட்டணி அரசியல்
மற்றொரு தரப்பு, கூட்டணி விரிவடைவது தேர்தல் கணக்கில் சாதகமாக அமையும் என வலியுறுத்துகிறது. சிறிய அளவிலான வாக்குகளும் சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால், கூட்டணியில் இணையும் ஒவ்வொரு கட்சியும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக பல்வேறு சமூக மற்றும் பிராந்திய ஆதரவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த இணைவு பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் கூட்டணி அமைப்புகள் தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவரும் நிலையில், தேமுதிக சேர்ந்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தல்
தற்போதைக்கு கூட்டணி பேச்சு வார்த்தைகள் மட்டுமே தொடங்கி இருக்கின்றன. இன்னும் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு என நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. மேலும் திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் மதிமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை தேமுதிக விட அதிக சீட்டை எதிர்பார்க்கும். இது வரும் காலங்களில் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கலாம் என்கின்றனர். தேமுதிக வருகை திமுக கூட்டணிக்கு பலமா? பலவீனமா? என்பதை தேர்தல் முடிவுகள் தான் காட்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
கனிமொழி சொன்ன அந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் யார்? அமித்ஷா போஸ்டிங் தருவாராமே! மதுரையில் பரபரப்பு -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்










Click it and Unblock the Notifications