காங்கிரஸை வெளியேற்ற திமுகவின் பிளான் B? ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! தேமுதிக இணைந்தது எப்படி?
சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்தது, காங்கிரஸ் மீதான ஸ்டாலினின் மறைமுக பதிலடி அல்லது கூட்டணியில் காங்கிரஸை பலவீனப்படுத்தி வெளியேற்றும் வியூகமா என்பது அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதமாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு காரணம்- காங்கிரஸ் கட்சிதான். கடந்த சில மாதங்களாக திமுக தலைமைக்கு கோபம் வரும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகிறார்கள். அதாவது திமுகவின் வாக்குச் சதவீதத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் பலர் பேசி வருகிறார்கள்.
ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் (மாநில அளவில்) என்ன என்பதை திமுகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.
அவை:
- திமுக (DMK): 37.70% (188 இடங்களில் போட்டி, 133 வென்றது)
- காங்கிரஸ் (INC): 4.27% (25 இடங்களில் போட்டி, 18 வென்றது)
- விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK): 0.99% (6 இடங்களில், 4 வென்றது)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI): 1.09% (6 இடங்களில், 2 வென்றது)
- கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)): 0.85% (6 இடங்களில், 2 வென்றது)
- தேமுதிக (DMDK): 0.43% (60 இடங்களில் தனித்து போட்டி, எதுவும் வெல்லவில்லை)
திமுக கூட்டணி மொத்த வாக்கு சதவீதம் சுமார் 45.7% ஆக இருந்தது. காங்கிரஸ் 4.27% வாக்குகளுடன் கூட்டணியின் முக்கிய கூட்டணியாக இருந்தாலும், சமீபகாலமாக ஆட்சியில் பங்கு கோரி வரும் நிலையில் ஸ்டாலின் அதை கடுமையாக எதிர்த்துள்ளார். "ஆட்சியில் பங்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் தேமுதிகவின் 0.43% வாக்குகள் (குறிப்பாக விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு) திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். ஆனால் காங்கிரஸின் 4.27% உடன் ஒப்பிடுகையில் தேமுதிக வாக்குகள் குறைவு எனினும், சில மாவட்டங்களில் (வடக்கு, தெற்கு) முக்கியமான ஆதரவு உள்ளது. இது காங்கிரஸ் கோரிக்கைகளுக்கு எதிராக திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் வியூகமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது: "காங்கிரஸ் அதிக இடங்கள் அல்லது அதிகாரப் பங்கு கோரினால், தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்து திமுக தனது ஆதிக்கத்தை தக்க வைக்க முயல்கிறது. இது காங்கிரஸை பலவீனப்படுத்தி, தேவைப்பட்டால் கூட்டணியில் இருந்து விலகச் செய்யும் திட்டமாக இருக்கலாம்." காங்கிரஸ் தரப்பில் இதுவரை வலுவான எதிர்வினை இல்லை, ஆனால் "ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவது நல்லது" என்று ஒரு தலைவர் கூறியுள்ளார்.
தேமுதிகவுடனான இந்த கூட்டணி திமுகவுக்கு பெரும் பலத்தை சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. விஜயகாந்த் ரசிகர்களின் வாக்குகள், குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான ஆதரவு திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேமுதிகவுக்கு 7 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும், ராஜ்யசபா இடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பேசப்படுகிறது.
இந்த மாற்றம் திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, அதிமுக-பாஜக அணியை சவாலுக்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையான கே.சி.வேணுகோபால், சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திக்க முயன்றும் சந்திக்க முடியவில்லை. இது முழுக்க முழுக்க காங்கிரஸ் மீது ஸ்டாலினின் கோபத்தையே காட்டுகிறது.
மேலும் அதிக சீட்டு கேட்டு அது கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸே கூட்டணியை விட்டு வெளியேறுவதென்றால் வெளியேறட்டும் என்றும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சீட்டை வேறு கட்சிக்கு கொடுக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்ததாராம். எனவே தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தது, திமுகவின் பிளான் பி என்றும் சொல்லப்படுகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications