விஜய பிரபாகரன் இப்பவே கிளம்பிட்டாராமே.. சட்டென மாறுது அரசியல் கிளைமேட்.. குஷியில் துள்ளும் தேமுதிக
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேசமயம், தேமுதிகவுக்குள் விரைவில் ஒருசில மாறுதல்கள் ஏற்படலாம் என்கிறார்கள். இதுகுறித்த பிரத்யேகமான சில தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தேமுதிகவின் கட்சி தலைவராக பிரேமலதா பொறுப்பேற்பார் அல்லது செயல் தலைவராக பொறுப்பேற்பார் அல்லது பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என்று பல்வேறு செய்திகள் அடிக்கடி மீடியாக்களில் வலம் வந்தபடியே உள்ளன.

செயல் தலைவர்: குறிப்பாக, திமுக பாணியிலேயே "செயல் தலைவர்" பதவி தேமுதிகவிலும் உருவாக போவதாக செய்திகள் வட்டமடித்தன.. மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்..
கட்சியில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளுமே, அப்போது ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது.. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிகவும், செயல் தலைவர் பதவியை உருவாக்க போவதாக சொன்னார்கள். ஆனால், ஒருவருடமாகவே இப்படி தகவல்கள் வந்தாலும், உறுதியான முடிவு இதுவரை தேமுதிகவில் எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், செயல் தலைவர் பதவியில் பிரேமலதாவும், மாநில இளைஞரணி செயலர் பதவியில் விஜய பிரபாகரனும் அலங்கரிக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது.. வரும் டிசம்பர் மாத இறுதியில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை நடத்த முடிவாகி உள்ளதால், அதற்கு முன்பாகவே, கட்சி தலைமை அலுவலகத்தில் யாகம் நடத்திவிட்டு, இந்த புதிய பொறுப்புகளை இருவரும் ஏற்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளையும் தேமுதிக மேலிடம் கையிலெடுத்த நிலையில்தான், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. இப்போது, விஜயகாந்தின் உடல் நிலையை மிகவும் சீரியஸாக கவனித்து வருகிறதாம் அவரது குடும்பம். விஜயகாந்த்தின் உடல்நிலையை கவலையுடன் பேசுகிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியில் சில மாற்றங்களை செய்ய பிரேமலதா முடிவு செய்திருக்கிறாராம்.. அந்த முடிவுகளுக்கு அவரை சுற்றியுள்ள அவரது குடும்பத்தின் அழுத்தமே காரணம் என்கிறார்கள்.
பிரேமலதா: அதாவது, "கட்சியின் தலைவராக உள்ள விஜயகாந்தின் உடல் நிலை மோசமாக இருப்பதையும், அவர் ஆக்டிவ்வாக கட்சி பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அவரது பெயரில் அறிக்கை வருவதும், அவர் உத்தரவிட்டதாக வரும் செய்திகளிலும், பெரிய அளவுக்கு நம்பிக்கை யாருக்குமே வருவதில்லை. இதுவும் கட்சிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதனால், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவர் பதவியில் நீங்கள் அமர வேண்டும்.. கட்சியின் இளைஞரணி பொறுப்பில் மகனை உட்கார வைக்க வேண்டும் என்பது உள்பட சில முக்கிய மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று பிரேமலதாவிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்துவது அதிகரித்து வருகிறதாம்.
அதிரடி மாற்றங்கள்: இந்த வலியுறுத்தல்கள் நீண்ட காலமாக இருந்தாலும், இதுநாள் வரை இது குறித்து கவனம் செலுத்தாத பிரேமலதா, தற்போது இதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளாராம்.
அதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பதற்காக கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக்களை அடுத்த மாதம் கூட்ட திட்டமிட்டுள்ளார் பிரேமலதா. அந்த கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்கவும் தயாராகிறாரம் பிரேமலதா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications