ஈகோவை சீண்டிய விமர்சனம்.. திரும்ப திரும்ப "அதே" வார்த்தையை சொன்ன பிரேமலதா.. ப்பா எவ்வளவு கோபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் முதல்வர் பழனிசாமி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனங்களை வைத்துள்ளார்.

Recommended Video

    சென்னை: ஜெ-வின் பக்குவம் இ.பி.எஸ்.-க்கு இல்லை: அ.தி.மு.க. மீது பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

    அதிமுக கூட்டணியில் இருந்து கடந்த வாரம் தேமுதிக வெளியேறியது. தேமுதிக 18+ தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை கேட்ட நிலையில் அதிமுக 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக மொத்தமாக வெளியேறி உள்ளது.

    இந்த நிலையில் அமமுக - தேமுதிக இடையில் நேற்று தொகுதி பங்கீடு உடன்படிக்கை எட்டப்பட்டது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    விமர்சனம்

    இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி முறிந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை வேகமாக ஆரம்பிக்கும் திட்டத்தில்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் அதிமுகதான் நேரம் தாழ்த்திக் கொண்டே இருந்தது. தேர்தல் மிக மிக அருகில் வந்த பின் இப்போது கூட்டணி உடைந்துள்ளது. அதிமுக மிகப்பெரிய தவறை செய்தது.

    பக்குவம்

    பக்குவம்

    தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். எங்களுக்கா பக்குவம் இல்லை? ஜெயலலிதா பக்குவமாக செயல்பட்டார். அந்த பக்குவம் அண்ணன் எடப்பாடியாரிடம் இல்லை. பக்குவம் என்பது அதிமுகவிற்குத்தான் இல்லை.

    கடுமை

    கடுமை

    மற்ற கட்சிகளை அழைத்து பேசிய முதல்வர் தேமுதிகவை கடைசியில் அழைத்தார். இதை நாங்கள் விரும்பவில்லை. அண்ணன் எடப்பாடிக்குத்தான் கூட்டணியை காக்கும் வகையில் போதுமான பக்குவம் இல்லை. கூட்டணியை கட்டிக்காத்து அதை வெற்றி கூட்டணியாக மாற்றும் பக்குவம் அவருக்கு கிடையாது.

    முதிர்ச்சி

    முதிர்ச்சி

    நாங்கள் எவ்வளவு முயன்றும் முதல்வர் இறங்கி வரவில்லை, என்று பிரேமலதா குறிப்பிட்டுள்ளார். இதில் பக்குவம் என்பதை பிரேமலதா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். முதல்வருக்கு பக்குவம் போதவில்லை என்ற ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பிரேமலதா பயன்படுத்தி உள்ளார். முன்னதாக தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.

    மோதல்

    மோதல்

    தேமுதிகவுக்கு கூட்டணி தர்மம் இல்லை. அவர்களிடம் போதிய பக்குவம் முதிர்ச்சி இல்லை. அவர்களுக்கு அதிக இடங்களை பெறும் தகுதியும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகுதி இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இடங்களை ஒதுக்க முடியும், என்று தேமுதிகவை சீண்டும் வகையில் பேசி இருந்தார்.

    காரணம்

    காரணம்

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பக்குவம் என்ற ஒரே வார்த்தையை பயன்படுத்தி பிரேமலதா மீண்டும் மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார். பாமகவுடன் தங்களை ஒப்பிட்டதையும் பக்குவம் இல்லை என்று கூறியதையும் தேமுதிக விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் கோபம் அடைந்து முதல்வரை தேமுதிக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    உண்மை

    உண்மை

    ஆனால் அதிமுக தரப்போ முதல்வரின் ஒப்பீட்டில் எந்த தவறும் இல்லை. உண்மையைத்தான் அவர் பேசி இருக்கிறார். பாமகவிற்கு அதிக வாக்கு வங்கி இருப்பதால் அதிக இடங்களை கொடுத்து உள்ளனர். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்று பதில் அளித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+