அத்திவரதரை தரிசிக்க வந்த விஜயகாந்த்.. கூலிங் கிளாஸுடன்.. கைத்தாங்கலாக வருகை..!
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.
பொதுவாக விஜயகாந்த்துக்கும், அவரது மனைவிக்கும் கடவுள் பக்தி அதிகம். அதிலும் பிரேமலதா எந்த நாள், கிழமை, விசேஷங்களையும் தவறவே விட மாட்டார். கட்டாயம் கோயிலுக்கு சென்று வழிபட்டு விடுவார்.
நடந்து முடிந்த தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி ஒப்பந்தத்துக்கு பிறகு, இந்த பக்தியை பற்றி வெளிப்படையாகவே பிரச்சாரங்களில் பேசினார். "கடவுள் இல்லை என்பவர்கள் இங்கு பொட்டு வைத்தால் அழிப்பார்கள், அதுவே பிற இடத்தில் சென்று பொட்டு வைத்துக்கொண்டு அப்படியே இருப்பார்கள்" என்று ஸ்டாலினை ஒரு இடி இடித்தார்.

மகன்கள்
இந்நிலையில், 40 வருட சிறப்பாக கருதப்படும் அத்திவரதரை தரிசிக்க விஜயகாந்த் குடும்பத்தினர் இன்று வந்திருந்தனர். காலை 9.30 மணி அளவில் விஜயகாந்த், பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், சுதீஷின் மனைவி என குடும்ப சகிதமாக உள்ளே நுழைந்தனர்.

கூலிங்கிளாஸ்
ப்ளூ கலர் ஜீன்ஸ், வெள்ளை சட்டையுடன் கூலிங் கிளாஸ் அணிந்தபடி விஜயகாந்த் வந்திருந்தார். அவரை இரு புறமும் கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றனர். தட்டு தடுமாறி விஜயகாந்த் வந்தாலும், அங்கு குவிந்திருந்த மக்கள் ஆர்வமாக அவரை முண்டியத்து கொண்டு பார்த்தார்கள்.

மக்கள் ஆர்வம்
சிலர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டார்கள். சுற்றியிருந்த மக்களை பார்த்த விஜயகாந்த் புன்முறுவல் பூத்தார். ஒரு சில இடங்களில் மக்களை பார்த்து கை கூப்பி வணக்கம் சொன்னார். கோயில் பிரகாரம் வந்ததும் கூலிங்கிளாஸ் எடுத்துவிட்ட விஜயகாந்த் அத்திவரதரை தரிசித்தார்.

வழிபாடு
அப்போது சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. மேலும் மகன் சண்முக பாண்டி நடிக்கும் மித்ரன் படத்தின் பூஜையின் ஸ்லைட் அதாவது பெயர்ப்பலகை அத்திவரதர் சன்னதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாமி கும்பிட்ட விஜயகாந்த் பின்னர் கோயிலை விட்டு கிளம்பி சென்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications