அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக - விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
Recommended Video

2011 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.

ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், ஆரம்பம் முதலே தே.மு.தி.க. அதிருப்தியில் இருந்து வந்தது. பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திய அதிமுக, அக்கட்சிக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. இது தே.மு.தி.க.வை எரிச்சலடைய வைத்தது. பாமகவை விட தங்களுக்கு கூடுதல் இடம் அளிக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியது.
ஆனால், அதை அ.தி.மு.க. பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில், 41 தொகுதிகளை தேமுதிக கேட்க, அதிமுக தரப்பில் 28 தொகுதிகள் ஆஃபர் கொடுக்கப்பட்டது. ஆனால், தேமுதிக அதற்கு சைலண்ட்டாக இருந்தது.
அதன்பிறகு அதிமுக 28 தொகுதிகள் என்பதையும் குறைக்க, தேமுதிக 25 தொகுதிகள் வரை இறங்கியது. ஒருக்கட்டத்தில் அதிமுக 15, 13 என்று தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே செல்ல, தேமுதிக அதிர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் தான் அ.தி.மு.க. கூட்டணியில் தொடரலாமா? என்று மாவட்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை இன்று அவசர ஆலோசனை நடத்தியது. முடிவில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக கேட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் அதிமுக ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அமுதிக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications