தேமுதிக ஒரு பக்குவமற்ற கட்சி... அவர்கள் வெளியேறிதால்... எந்த பாதிப்பும் இல்லை... முதல்வர் அதிரடி
சென்னை: தேமுதிக ஒரு பக்குவமற்ற கட்சி என்றும் அக்கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் இறுதி செய்துள்ளது.
அடுத்தகட்டமாக மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள இரு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் தயாராகி வருகின்றன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமையே சேலம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.

மாபெரும் வெற்றி
இந்நிலையில், நேற்று மாலை சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் கூறிவருகிறார், ஆனால் அது நடக்காது" என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள்
மேலும், தேர்தலில் வாக்களிக்கப்போவது மக்கள் தான் என்றும் மக்கள் என்றும் நீதிபதிகள் எப்போதும் சரியான தீர்ப்புகளையே வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் கருக்கவைப்புகளைப் பொய்யாக்கி, மக்கள் அதிமுகவை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் அவர் கூறினார். நீட் தேர்வில் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்த அவர், நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

பக்குவமற்ற கட்சி
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது குறித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தேமுதிக ஒரு பக்குவமற்ற கட்சி, அவர்கள் வெளியேறியதால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கூட்டணி என்பது அவ்வப்போது தேர்தல் சமயங்களில் ஏற்படும் ஒன்று. கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து நிற்பது தவறானது இல்லை. ஆனால், அதேநேரம் ஒரு கட்சி மீது பழி சொல்வது முற்றிலும் தவறான செயல்" என்றார்.

வங்கு வங்கியைப் பொறுத்தே இடங்கள்
கூட்டணியைவிட்டு வெளியேறிய பின், கூட்டணிக் கட்சிகள் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்புவது எந்தவொரு கட்சிக்கும் அழகில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கியைப் பொறுத்தே தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உடன்பாடு இல்லை
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்னரே திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருந்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications