பேச்சை நிறுத்திய பிரேமலதா.. அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தேமுதிக? பாஜகவுடன் திடீர் ஆலோசனை.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ளும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாம்.

அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது தேமுதிக என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். அதிமுகவிடம் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை என்று தேமுதிக வெளிப்படையாக மறுத்தாலும், திரைமறைவாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம் .

DMDK to reportedly to have 5 seats in BJP alliance Stop talks with AIADMK all of a sudden

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.

அதிமுக கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதிமுக ஆலோசனை: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று முதல்நாள் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

முக்கியமாக பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொண்டும் அதிமுகவுடன் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆனால் இது எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேமுதிக முடிவு: தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ளும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாம்.

5 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் கேட்டும் கொடுக்கப்படாத நிலையில் தேமுதிக அதிமுகவுடன் பேச்சை நிறுத்திவிட்டு பாஜகவுடன் பேச்சை தொடங்கி உள்ளதாம் தேமுதிக.

அதிமுக கூட்டணி: அதிமுகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக ஆலோசனை செய்து வருகிறதாம். மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம்.

பாஜக ஒரே ஒரு ராஜ்ய சபா தொகுதியை கேட்க தேமுதிக முடிவு செய்துள்ளதாம். பொதுவாக தேமுதிக அதிக இடங்களை கேட்பது வழக்கம். ஆனால் இந்த முறை.. இடங்களை குறைவாக கேட்டு.,. ஒரு ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். ஆனால் பாஜக இன்னும் இதை ஏற்காத நிலையில் கூட்டணி இறுதி ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+