விஜய பிரபாகரனுக்கு அதிர்ஷ்டம்? திமுகவில் M.P கமல்ஹாசன் கை ஓங்க போகிறது.. இப்போ ஏதுக்கு அவசர மீட்டிங்
சென்னை: பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. திமுக சார்பில் கமல் எம்.பி.யாக உள்ள நிலையில், இன்றைய தினம் அக்கட்சியின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த கூட்டம் எதற்காக என்று தெரியவில்லை. இதனால் மநீம உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பும், ஆர்வமும் கூடிவருகிறது.
கடந்த வருடம் நடந்த எம்பி தேர்தலின்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது... சில தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் கமலுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.. எனவே, மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.. எனினும், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது என உடன்பாடு கையெழுத்தானது.. எனவே, தேர்தலில் போட்டியிடாமல் தமிழகம் முழுவதும் கமல் கட்சி பிரச்சாரம் செய்தது.

வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு?
இந்நிலையில், வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிதாக 6 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது... ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 2ம் தேதி ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் யார்
அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, என்.சந்திரசேகரன் ஆகியோரும், திமுக சார்பில் மற்ற 4 பேரும் எம்.பி.யாக தேர்வாகினர்.. பொதுவாக ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். அந்த அடிப்படையில், திமுகவுக்கு 4 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு 2 உறுப்பினர்களும் தேர்வுபெறும் நிலை உள்ளது. அந்தவகையில், பாமகவில் அன்புமணிக்கு இந்த முறை வாய்ப்பு குறைவு என்பதால், 2 இடங்களையும் அதிமுகவே நிரப்ப உள்ளது..
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஏற்கனவே மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக தங்களுக்கு கொடுக்க இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை தேர்ந்தெடுத்தால், விஜயபிரபாகரன் எம்பியாக வாய்ப்புள்ளது.
திமுக சார்பில் கமல்ஹாசன்
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லாவும் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படுமா? என்பது தெரியவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், ஏற்கனவே செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் கமலுக்கு திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.. அதாவது, எம்.சண்முகத்துக்குப் பதில் கமல் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, பி.வில்சன் பிஎஸ்சி, எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, பி.வில்சனுக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுகவில் மற்ற இருவரும் புதிய முகங்கள் ஆவர்.
இன்று அவசர கூட்டம்
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் மே 28-ந் தேதி (இன்று), சென்னை ஆழ்வார்பேட்டைலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இன்று காலை நடக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என்று அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டம் எதற்காக என்று தெரியவில்லை. இதனால் மநீம உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்பும், ஆர்வமும் கூடிவருகிறது.












Click it and Unblock the Notifications