திமுக 1000.. நீங்க 2000.. இதுவா மாற்றம்? ஓமந்தூராரை விட்டுட்டு பட்டினப்பாக்கம் ஏன்? வெளுத்த சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் 12 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மீனவ மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது என அவர்கள் போராடி வருவது குறித்து அரசுக்கு எந்தக் கவனமும் இல்லை.. வாக்குறுதி கொடுத்த பல திட்டங்களை செயல்படுத்தாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், இந்த புதிய தலைமைச் செயலகம் தேவையா? தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை கட்டப்போவதும் இல்லை, கட்டவிடப்போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கறாராக கூறியுள்ளார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் தினந்தோறும் கண்டனங்கள் வெளியாகி கொண்டேயிருக்கின்றன.. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், இதற்கு தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்.

DMK

சென்னை பட்டினப்பாக்கம்

புதிய தலைமைச் செயலகத்துக்காக இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசலை காரணம் சொல்கிறீர்கள் என்றால், அதைவிட அதிக நெரிசல் உள்ள பட்டினப்பாக்கத்தில் கட்டுவது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பையும் வாழ்வாதாரத்தையும் புறக்கணித்து, மக்களின் தேவைக்கா.. அல்லது முதல்வரின் தனிப்பட்ட வசதிக்கா இந்தத் திட்டம்?

அரசுத் துறைகள், சட்டமன்றம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விடுதிகள், மக்கள் காத்திருப்பு, பார்க்கிங் என இத்தனை வசதிகளையும் குறுகிய பட்டினப்பாக்கம் இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுபடுத்துவோம் என அறிவித்துவிட்டு, இத்தனை குறுகிய இடத்தைத் தேர்வு செய்வதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா?

புதிய தலைமை செயலகம் எதுக்கு

2004 சுனாமி பாதித்த பகுதிகளில் ஒன்றான பட்டினப்பாக்கம், எதிர்கால சுனாமி மற்றும் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், அங்கு தலைமைச்செயலகம் அமைப்பது எப்படி பாதுகாப்பான முடிவாகும்? 2040-2070க்குள் கடல்மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக அறிக்கை எச்சரிக்கும் நிலையில், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்வதுதான் எப்படி சாத்தியம்? என்றெல்லாம் சீமான் கேள்வி எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்.

இன்றைய தினமும் தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் கட்ட திட்டமிட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை கட்டப்போவதும் இல்லை, கட்டவிடப்போவதும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கறாராக கூறியுள்ளார்.

சீமான் நறுக் கேள்வி

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், நவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலகத்திற்காகவே ஓமந்தூரார் வளாகத்தில் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால், அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா அம்மையார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை அரசு மருத்துவமனையாக மாற்றியபோது அமைதி காத்த தலைவர்கள், இன்று 1,200 கோடி ரூபாய் செலவில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று சொல்வது ஏன்? அன்று அந்த கட்டிடத்தையே தலைமைச் செயலகமாகத் திறக்க வலியுறுத்தி ஏன் அவர்கள் குரல் கொடுக்கவில்லை..

திமுக 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தால், நாங்கள் 2,000 ரூபாய் தருகிறோம் என்று சொல்வதும், எடப்பாடி பழனிசாமி 3 சிலிண்டர்கள் தருகிறேன் என்றதும், நாங்கள் 6 சிலிண்டர்கள் தருவோம் என அறிவிப்பதும்தான் நீங்கள் சொன்ன மாற்றமா?

கட்ட போவதில்லை, கட்ட விடப்போவதுமில்லை

அரசாங்கம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் போராடிக்கொண்டு இருக்காமல் தங்களது வேலையை பார்க்க வேண்டும். இந்த தலைமை செயலக இந்த திட்டத்தை யாரும் கட்டப்போவதும் இல்லை, கட்ட விடப்போவதும் இல்லை..

சொந்த தாய் நிலத்திலேயே மக்களை அகதிகளாக்கும் போக்கு இங்கு தொடர்கிறது.. மேகமலையில் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதிக்கு வந்து போராடி வருவது குறித்தோ, மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்தோ சட்டமன்றத்தில் விவாதிக்காமல், சர்க்கார் பட பேனரையோ சுவரொட்டியையோ கிழித்ததுதான் இவர்களுக்கு பெரிய பிரச்சனையா?

பட்டினப்பாக்கத்தில் 12 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மீனவ மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது என அவர்கள் போராடி வருவது குறித்து அரசுக்கு எந்தக் கவனமும் இல்லை..

திமுக Vs தவெக

இப்போது தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராக இல்லை என்று தாங்கள் வாக்குறுதி கொடுத்த பல திட்டங்களை செயல்படுத்தாமல் தவெக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

ரூ.13.5 லட்சம் கோடி கடன் இருப்பதாக அரசின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி கட்ட கூடிய நிலையில் மாநிலத்தின் பொருளாதார சுமை இருக்கும் நிலையில் ரூ.1,200 கோடி செலவில், அதுவும் மக்கள் வாழும் நெரிசல் மிகுந்த பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முயற்சிப்பது அவசியமா?

அப்படி அமைக்க வேண்டுமானால் ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அந்த இடத்தை மீண்டும் செழுமைப்படுத்தி புதிய தலைமைச் செயலகமாக மாற்றலாம்" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+