தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்... ஓகே சொன்னது திமுக!
Recommended Video
சென்னை; தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதால் காங்கிரஸ் மகிழ்ச்சியில் உள்ளதாம்.
1991-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்தார் மன்மோகன்சிங். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக அவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கபளீகரம் செய்து கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைந்தது.

மன்மோகன்சிங்குக்கு சீட்
சுமார் 28 ஆண்டுகாலம் நாடாளுமன்ற பணியாற்றி வந்த மன்மோகன்சிங்கை தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் லோக்சபா தேர்தல் கூட்டணியின் போதே காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

வைகோவுக்கு வாய்ப்பு
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என திமுகவே அறிவித்திருக்கிறது. எஞ்சிய 2 இடங்களுக்கு திமுகவில் கடும் போட்டி நிலவியது.

ஓகே சொன்ன திமுக
இந்நிலையில் மன்மோகன்சிங்குக்காக மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் மகிழ்ச்சியில் உள்ளதாம்.

திமுகவில் கடும் போட்டி
தற்போதைய நிலையில் திமுகவுக்கு ஒரே ஒரு ராஜ்யசா இடம்தான் இருக்கிறது. இதை கைப்பற்றுவதற்கான லாபிகள் திமுகவில் படு உக்கிரமாக நடைபெற்று வருகின்றன.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications