புதுசு புதுசா கிளம்புறாங்களே.. ஓட்டு போடுவதை படம் பிடித்து பிரச்சாரம்? தவெக மீது புகார்
சென்னை: தேர்தல் நாளன்று தவெகவினர் வாக்களிப்பதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் யாராவது படம் பிடித்து பதிவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 39 நாட்களாக அரசியல் கட்சியினரின் பிரச்சாரங்கள் நேற்று மாலை 6 மணி, அதாவது 48 மணி நேரத்திற்கு முன்பு ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து புதிய தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட கூடாது, எந்த கட்சிக்கும் ஆதரவாக எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெகவினர் பிரச்சாரம் ஓய்ந்த நிலையிலும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் நாளை வாக்களிப்பதை கூட படம் பிடித்து விதிகளை மீறி சமூகவலைதளங்களில் பதிவிட்டு பிரச்சாரம் செய்ய தவெகவினர் திட்டம் என அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இது போல் படம் பிடித்து பதிவிட்டால், சம்பந்தப்பட்டவரின் சமூகவலைதள கணக்கு முடக்கப்பட்டு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எல்லா வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார்.
பிரச்சாரம் ஓய்ந்ததும் சில விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதாவது லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறையினருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. பரப்புரை முடிவுக்கு வந்த பின்னர், யாதொரு பொதுக் கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ நடத்தவோ கூடாது. விளம்பரம் போன்ற போர்வையில் சமூகவலைதளங்களில் பிற தொடர்பு சாதனங்கள் வாயிலாக பிரச்சாரத்தை முன்னெடுக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அது போல் சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தேர்தல் தொடர்பாக கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 14 லட்சத்து 59 ஆயிரம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். 62 இடங்களில் வாக்குகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4.18 லட்சம் பேர் தபால் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு











Click it and Unblock the Notifications