எல்லோரையும் திசை திருப்பும் திமுக-அதிமுக! அவுங்க திட்டமே வேற! பதற வைக்கும் 10வது பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் முட்டுக்கட்டை மற்றும் திரைமறைவு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்துக்கொண்டே இருப்பது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், அதேசமயம் ஒருவித பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, திராவிட அரசியலின் இரு பெரும் துருவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள், தங்களின் நிஜமான வியூகங்களை மறைத்து வேறொரு ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனவா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

DMK AIADMK

தமிழக அரசியலின் இந்த இக்கட்டான சூழலில், இடதுசாரிக் கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இன்று தனித்தனியே தங்களது உயர்மட்டக் குழு கூட்டங்களைக் கூட்டியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இந்த அசாதாரண சூழலில், அடுத்தகட்டமாக எந்த மாதிரியான அரசியல் முடிவை எடுப்பது என்பது குறித்து இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (VCK) நாளை தங்களது கட்சித் தலைமையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்த மூன்று கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டியவுடன், வரும் மே 10-ம் தேதி திமுக தலைமையைச் சந்தித்துத் தங்களது இறுதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. அதன் பின்னரே, திமுக தனது அடுத்த அதிரடி நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 விதமான தியேரிகள்

தற்போதுள்ள அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனிக்கும் அரசியல் நோக்கர்கள், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஒன்பது விதமான சாத்தியக்கூறுகளை முன்வைக்கின்றனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, பத்தாவதாக ஒரு அதிரடித் திட்டம் திரைமறைவில் தீட்டப்பட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

முதல் சாத்தியக்கூறாகப் பார்க்கப்படுவது, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது. இதற்கு பாஜகவின் ஆசி இரு தரப்பிற்கும் தேவைப்படும் என்றாலும், அதிமுகவுக்கு இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

தவெகவிற்கு ஆதரவு

இரண்டாவது சாத்தியக்கூறாக, திமுக தனது கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகியவற்றை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவு அளிக்க அனுமதிப்பது. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க வழிவகை செய்துவிட்டு, திமுக வெளியிலிருந்து அந்த அரசை மறைமுகமாகக் கட்டுப்படுத்தலாம். ஆனால், இது எதிர்காலத்தில் தங்களது கூட்டணிக் கட்சிகள் விஜய்க்கு நெருக்கமாகிவிடுமோ என்ற அச்சம் திமுகவின் ஒரு பிரிவினரிடையே உள்ளது.

பாஜக திட்டம்

மூன்றாவது மற்றும் நான்காவது சாத்தியக்கூறுகள் சற்று சிக்கலானவை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்தால், தமிழகத்தில் அரசியல் முடக்கம் ஏற்படும். அதேசமயம், விஜய் தனது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்து, அதிமுகவை விஜய்யின் அமைச்சரவையில் ஒரு சிறிய பங்காளியாகச் சேர்க்க முயற்சி செய்யலாம். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி இதற்கு இணங்காவிட்டால், அதிமுகவை உடைத்து விஜய்க்குத் தேவையான ஆதரவைத் திரட்ட பாஜக முயலலாம் என்பது ஐந்தாவது மற்றும் ஆறாவது சாத்தியக்கூறுகளாகக் கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் ஆட்சி

ஏழாவது மற்றும் எட்டாவது சாத்தியக்கூறுகளாகக் கருதப்படுவது, பாஜக தனது ஒரு சட்டமன்ற உறுப்பினரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு விஜய்யின் ஆட்சியில் நேரடியாகப் பங்கேற்பது அல்லது எந்த முடிவும் எட்டப்படாத பட்சத்தில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது. இத்தகைய சூழலில் ஆறு மாதங்கள் மத்திய அரசின் ஆட்சி நீடிக்கும். ஒன்பதாவது சாத்தியக்கூறாக, ஆறு மாதங்களுக்குப் பிறகும் ஆட்சி அமைக்க வழி பிறக்கவில்லை எனில், தமிழகம் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

10வது திட்டம்

இருப்பினும், இந்த ஒன்பது திட்டங்களையும் விடத் தற்போது மிகவும் ரகசியமாகப் பேசப்படும் பத்தாவது திட்டம் தான் அரசியல் களம் புகையக் காரணமாகியுள்ளது. திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் இணைந்து, ஒரு பொதுவான மற்றும் நடுநிலையான ஆளுமையை முதலமைச்சர் வேட்பாளராக ஆதரிக்க முன்வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. தங்களது உண்மையான வியூகங்களை மூடி மறைப்பதில் கைதேர்ந்த இந்த இரு கட்சிகளும், தங்களுக்குள் நிலவும் மோதலைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு மூன்றாவது நபரை முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திசை திருப்பல் வியூகம்

இந்தத் திட்டம் குறித்துப் பேசும் அரசியல் ஆய்வாளர்கள், "திமுகவும் அதிமுகவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக வரும் செய்திகள் வெறும் புகைச்சலாக இருக்கலாம். எதிரிகளைத் திசைதிருப்பவே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மையான திட்டம் என்பது, தமிழகத்தின் மீது பெரும் செல்வாக்கு கொண்ட ஒரு பிரபல ஆளுமையை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து, இரு கட்சிகளும் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதே" என்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த ஒரு மிகப்பலமான மற்றும் பிரபலமான ஆளுமை தூதுவராகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி பிரபலம்?

தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான காலகட்டம். கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும், அதிகாரத்தைக் கைமாற்றுவதிலோ அல்லது தக்கவைப்பதிலோ திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மேற்கொள்ளும் இந்த 'நிழல் யுத்தம்' யாருக்குச் சாதகமாக முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் புகைமூட்டத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்தப் பத்தாவது நபர் யார் என்பதும், தமிழகத்தின் எதிர்காலம் யார் கையில் என்பதும் இன்னும் சில நாட்களில் தெளிவாகத் தெரிந்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய்யை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து ஒருவேளை அவர் எம்ஜிஆர் மாதிரி தொடர்ந்து அரியணையில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்ற பதற்றம்தான் இந்த 10வது ஆப்ஷனை நோக்கி நகர வைத்துள்ளதாக சொல்கிறார்கள் நாம் பேசிய சில அரசியல் விமர்சகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+