அடி சறுக்கிய திமுக, அதிமுக.. தவெகவுக்கு எகிறிய செல்வாக்கு.. 2 தொகுதிகள் தந்த படிப்பினை என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயம்தான்.. ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதே வெற்றியைத் தக்கவைப்பதுதான் அதைவிட பெரிய சவால்... அதுபோலத்தான் இப்போது தமிழக அரசியலில் தவெகவுக்கும், விஜய்க்கும் அப்படியொரு சோதனை வந்தது.. 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலுக்கு முக்கிய விஷயத்தை உணர்த்தியுள்ளது.. தவெக வென்றது ஏதோ ஒருமுறை அதிசயமா, அல்லது விஜய்க்கு மக்கள் ஆதரவு தொடர்கிறதா? கட்சி தாவினாலும் மக்கள் ஆதரிப்பார்களா? இதுபோன்ற பல கேள்விகளுக்கும் இன்றைய ரிசல்ட் பதிலளித்துள்ளது...!!!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைக்க முடியுமா என்பதுதான் கேள்வியாக எழுந்தது.

Power Test for Vijay Vijay Political Influence Tamil Nadu Bypoll

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யின் கவர்ச்சி குறைந்து வருகிறது.. சென்னையிலிருந்து தனி விமானம், கோவையில் பிரைவேட் ஜெட், அங்கிருந்து ஹெலிகாப்டர், பின்னர் மாட்டுவண்டியில் சென்று விஜய் வாக்கு கேட்கிறார் என்றால், இந்த 4 மாத காலத்திற்குள் தவெக அரசின் பயத்தைதான் காட்டுகிறது.. எனவே, கடந்த தேர்தல் வெற்றியை மட்டும் நம்பியிருக்காமல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி உழைத்தால்தான் அடுத்தடுத்த வெற்றிகளை தவெகவால் பெற முடியும்" என்கிறார்.

இது அவருடைய அரசியல் பார்வைதான் என்றாலும், தலைவரின் கவர்ச்சி மட்டுமே போதுமா, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பும் வலுவாக இருக்க வேண்டாமா என்ற கேள்வி முக்கியமானது..

குறைந்த வாக்குப்பதிவு - தவெகவுக்கு வார்னிங்?

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 93.22%, தாராபுரத்தில் 89.89% வாக்குகள் பதிவாகின. ஆனால், இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.99%, தாராபுரத்தில் 80.31% மட்டுமே பதிவாகியுள்ளன. இது முறையே 7.23, 9.58 சதவீதப் புள்ளிகள் சரிவு.

பொதுத்தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. இப்போது அவர்களது வாக்குப்பதிவு ஆர்வம் குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வாக்குப்பதிவு சரிந்ததாலேயே தவெகவின் ஆதரவு குறைந்துவிட்டது என்றும் சொல்லிவிட முடியாது.

எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தெரியவரும்.. ஆனால், வாக்களிக்க வராதவர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது

அதிமுகவில் வென்றவர்களே தவெக வேட்பாளர்கள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது தவெக சார்பில் போட்டியிட்டார்கள். எனவே, கட்சி மாறிய பிறகும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்களா, வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கிறார்களா அல்லது கட்சியைப் பார்த்து வாக்களிக்கிறார்களா என்பதும் இந்த தேர்தலில் சந்தேகமாக எழுந்தது. ஆனால், இரண்டு தொகுதிகளிலுமே தவெக வென்றுள்ளது. அந்தவகையில் இரண்டையுமே இன்று வாக்காளர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால், அது அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, மற்றும் தவெகவின் ஆதரவு என இரண்டுமே இந்த வெற்றிக்கு காரணமாக உள்ளது.. உள்ளூர் பிரச்சனைகளும் வேட்பாளரின் செயல்பாடுகளும் முடிவை தீர்மானித்துள்ளது.. அதனால்தான், கடந்த முறை தேர்தலைவிட சத்யபாமாவின் வாக்குகள் தாராபுரத்தில் குறைந்துள்ளன. எனினும், தவெக வெற்றி பெற்றுள்ளதால்,பொதுத்தேர்தலுக்குப் பிறகும் விஜய்க்கான ஆதரவு தொடர்வதற்கான இது அறிகுறியாக இருக்கும்.

திமுக, அதிமுக

திமுகவை பொறுத்தவரை, வாக்கு வங்கியை ஓரளவு தக்க வைத்துள்ளது.. ஆனால், அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.. இனி கட்சிகளுக்குள் நிறைய குழப்பங்கள், தாவல்கள், சலசலப்புகள் எழலாம்..

அதிமுக இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான காரணங்களையும் களநிலையையும் ஆராய வேண்டியிருக்கிறது. திமுக தனது தனிப்பட்ட வாக்கு பலத்தையும் தவெகவை எதிர்கொள்ளும் வியூகத்தையும் மதிப்பிட வேண்டியிருக்கிறது. தவெகவோ, கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் தேர்தல்களிலும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+