Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டார்கெட் பாஜக, அதிமுக.. மத்திய பட்ஜெட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் அதிமுகவைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

மத்திய அரசின் பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக எவ்வளவு நிதி ஒதுக்கி அறிவிப்புகள் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தான் பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

budget 2026 union budget 2026 dmk 2026

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து பிப்.12 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு அதிமுகவும் ஒத்து ஊதுகிறது. இவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் வரும் 12-ந் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3,458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2,000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ. 3,112 கோடி ஆகியவற்றை விடுவிப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை - வளர்ச்சித் திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அதிமுக.

நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அதோடு அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக் கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது ஒன்றிய பாஜக அரசு.

ஒரே நேரத்தில் 100 நாள் வேலை ஒழிப்பு சட்டம், விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என கிராமப்புற மக்கள் மீது இரட்டை அணுகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு உறுதுணையாக இருந்து துரோகம் செய்து வருகிறது அதிமுக.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், புது புது சட்டங்கள், ஒப்பந்தங்கள் வழியே மக்களை வஞ்சிப்பது, நம் வளர்ச்சியைத் தடுத்து வீழ்ச்சியில் தள்ள துடிப்பது என அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜகவை எதிர்த்தும், அதோடு கூட்டு சேர்ந்து டப்பா எஞ்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் டெல்லியின் அடிமையாக்கத் துடிக்கும் அதிமுகவை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+