ஸ்டாலின் கூட்டணியில் இழுபறி.. இறங்கி வராத 2 கம்யூனிஸ்ட் கட்சிகள்.. கறார் காட்டும் திமுக.. புது பிரச்சனை
சென்னை: திமுக கூட்டணியில் சுமூகமாக தொகுதி பங்கீடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக கறார் காட்டுவதால் தற்போது 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளதோடு, தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். அதற்கு முன்பாகவே திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

வழக்கத்தை விட இந்த முறை திமுக கூட்டணியில் பல்வேறு புதிய கட்சிகள் இணைந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் சேர்ந்துள்ளன. இதுதவிர ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாகி உள்ளது.
கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட்கள்
இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் திமுகவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை இருகட்சிகளும் இரட்டை இலக்கத்தில் எதிர்பார்த்தன. ஆனால் அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை.
5 தொகுதிகள் மட்டுமே
இதனால் இருகட்டங்களாக 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்தவர்கள் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும். கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். கூட்டணிக்குள் பல புதிய கட்சிகள் வந்துள்ளதால் அவர்களுக்கு தொகுதிகள் வழங்கும் வகையில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படுகிறது என்று திமுக தரப்பில் உறுதியாக கூறிவிட்டது.
அதிருப்தி
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நேற்று மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினர். அப்போது சண்முகம் 6 தொகுதிகளுக்கு மேலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் திமுக மறுத்துள்ளது.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தியடைந்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டாதால் இந்த முறையும் 6 சீட்டுகளை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளது.. ஆனால் அதனை திமுக தரப்பு கேட்பதாக இல்லை. 5 தொகுதிகள் தான் என்று உறுதியாக திமுக கூறிவிட்டதாம்.
ஆலோசனை
இதுபற்றி சண்முகம், ''இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்டோம். ஆனால் புதிய கட்சிகள் வந்துள்ளதால் நாங்கள் தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்துள்ளோம். ஆனாலும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து சொல்வதாக தெரிவித்தனர். அவர்கள் தங்களின் வரம்புகள் பற்றி தெரிவித்தனர். இருப்பினும் தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால் திமுக 5 தொகுதிகள் என்று தான் கூறியுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கமிட்டி குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக உடனான தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications