நீங்க வந்தா மட்டும் போதும்..உதயசூரியன் ரெடி! ஸ்ட்ராங் ஆகும் திமுக கூட்டணி! என்ட்ரி கொடுக்கும் 3 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் பிப்ரவரி மார்ச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தவிர்த்து, கூடுதலாக சில கட்சிகள் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. காரணம் இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சட்டமன்ற தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதில்லை அந்த மோசமான சாதனையை தகர்க்க வேண்டும் என்பதுதான் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் எண்ணம்.

அதை நோக்கியே அவரது அரசியல் திட்டங்களும் இருக்கிறது. திமுகவை பொருத்தவரை இதுவரை தனித்து போட்டியிட்டு வென்றதில்லை என்றாலும், சாதூரியமான முடிவுகளால் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை.

mk stalin dmk DMK Alliance

2026 தேர்தல்

எந்த காங்கிரசை எதிர்த்து திமுக ஆரம்பிக்கப்பட்டதோ அதே காங்கிரசுடன் தான் தற்போது பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறது. மேலும் பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கின்றன. ஆனால் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு அமைந்த கூட்டணி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வலுவாகவே இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தவாக மற்றும் சில அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டது.

திமுக கூட்டணி

அந்தக் கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக -நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய தேர்தலை கடந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்கிறது. இடையில் கூட்டணியில் சில சிக்கல்கள் இருந்தாலும் அதை பெரிய அளவில் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் திட்டம்

கடந்த தேர்தலைப் போல காங்கிரசுக்கு 25 தொகுதிகள், பிற கட்சிகளுக்கு சுமார் 40 தொகுதிகள் வரை ஒதுக்கிவிட்டு 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கட்சிகளுக்கு திமுக சின்னமே ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த கட்சிகள் மட்டும் அல்லாது திமுக கூட்டணிக்கு மேலும் சில சிறிய கட்சிகள் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, தம்மி முன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளும் கூடுதலாக திமுகவில் கூட்டணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

உதயசூரியன் சின்னம்

மேலும் அந்த கட்சி தலைவர்களுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டு அவர்கள் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாகவே மேற்சொன்ன சிறிய கட்சிகளை தலைவர்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இவர்கள் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதும் கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+