திமுக கூட்டணிக்கு ஆதரவு.. DVK பொதுக்குழுவில் எடுத்த முடிவு! வைகோவின் வலதுகரத்துக்கு சீட் கிடைக்குமா?
சென்னை: திமுக கூட்டணிக்கு மல்லை சத்யாவின் திராவிட வெற்றிக் கழகம் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் மல்லை சத்யா தொடங்கிய நிலையில், அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருடன் மல்லை சத்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்பின் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையில் காரசார மோதல் நடந்த சூழலில், மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதன்பின் சென்னையில் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.

அப்போதே திமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறிய மல்லை சத்யா, சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியில் சில இடங்களை கோருவோம் என்று தெரிவித்திருந்தார். தற்போது 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழு திராவிட வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் மல்லை சத்யாவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன.
தற்போது புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி இணைந்துள்ளன. இன்னும் சில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், எப்படி திமுக தலைமை அனைவரையும் அனுசரித்து தொகுதி பங்கீடு செய்யும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இப்படியான சூழலில், திராவிட வெற்றிக் கழகம் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏற்கனவே மதிமுகவுக்கு தொகுதி எண்ணிக்கையை குறைக்கும் முடிவில் திமுக இருக்கும் சூழலில், மல்லை சத்யாவுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications