DMK Alliance: திமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம்பெற போவது யார் – ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் தொகுதி பங்கீடு குழு அமைப்பது தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் [DMK Alliance].
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை குழு
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருகின்றன. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காங்கிரஸ் கட்சியில் உள்ள மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் சிலர் தொடர்ந்து திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்கள். திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அழைப்புக்காக காத்திருக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திமுக தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில் தேர்தல் தொகுதி பங்கீடு குழு அமைப்பது தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று இரவு ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கன் கே.என். நேரு, எ.வ. வேலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் திமுக தொகுதி பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தைக் குழு அமைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications