நேற்று விசிக... இன்று காங்கிரஸ்.. நாளை இடதுசாரிகள்? விஜய்க்கு எதிராக திமுகவின் அதிரடி ஸ்கெட்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட மாடல் அரசையும் திமுகவையும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நேரடியாக விமர்சித்திருந்தார் விஜய். திமுகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விஜய்யை விமர்சித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சிகளும் ஒவ்வொன்றாக களமிறங்கிவிட்டன. விஜய் பக்கம் தாவக் கூடும் என பேசப்பட்ட விசிக அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விளாசிவிட்டது; இதேபோல சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையும் செய்தியாளர்களை சந்தித்து விஜய்யை கடுமையாக விமர்சிக்கப் போகிறார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய் திமுகவை குறிப்பிட்டு அதன் திராவிட மாடல் அரசை விமர்சித்து ஊழல்வாதிகள் என்றார். ஆனால் பாஜக பெயரைக் குறிப்பிடாமலேயே பிளவுவாத சக்திகள்- சித்தாந்த எதிரிகள் என்றார். அதேநேரத்தில் அவங்க பாசிஸ்டுகள் என்றால் நீங்க பாயாசமா எனவும் கிண்டலடித்து பாஜக ஆதரவையும் வெளிப்படுத்தி இருந்தார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

திமுகவின் கடும் பதிலடி: மேலும் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை விஜய் முன்வைத்தார். இந்த முழக்கத்தை விசிக உள்ளிட்ட கட்சிகள் முதலில் ஆதரித்தன. காங்கிரஸ் நிர்வாகியும் கூட கூட்டணி ஆட்சி குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆனால் தற்போது ஒட்டுமொத்த அரசியல் களமும் விஜய்க்கு எதிராக திரும்பி இருக்கிறது. திமுகவின் அமைச்சர்களான ரகுபதி, சேகர்பாபு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் விஜய்யை கடுமையாக சாடினர். அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீம் என்றார். சபாநாயகர் அப்பாவு, ரஜினிகாந்துக்கு பதிலாக பாஜகவால் களமிறக்கப்பட்ட விஜய் என்றார்.

திருமாவளவன் அறிக்கை: இந்த நிலையில் நேற்று திமுகவின் கூட்டணிக் கட்சியான, விஜய் பக்கம் சாயக் கூடும் என சொல்லப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மிக கடுமையான அறிக்கை ஒன்றை விஜய்க்கு எதிராக வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், 'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள்.

பாசிசம் குறித்த புரிதல் இல்லை: ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா?

பண்டிகை காலத்து தள்ளுபடி: பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா? "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது என கூறியிருந்தார்.

இன்று காங்கிரஸ்; இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பிலும், நடிகர் விஜய்க்கு எதிராக காங்கிரஸின் ஆவேசமான விமர்சனங்கள் வெளியாகும் என்றே தெரிகிறது. ஏற்கனவே மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், சினிமா வசனங்களை எல்லாம் கட்சி கொள்கையாக எடுத்து கொள்ள வேண்டுமா? என பேசியிருந்தார்.

நாளை இடதுசாரிகள்: காங்கிரஸைத் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருக்கும் இடதுசாரிகளும் நடிகர் விஜய்யை கடுமையாக சாடி அறிக்கைகள் வெளியிடலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இடதுசாரிகளைத் தக்க வைப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதால் இப்படி ஒரு அறிக்கை வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

திமுகவின் ஸ்கெட்ச்: திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மவுனம் கலைத்து நடிகர் விஜய்யை கடுமையாக வெளுத்தெடுத்தாக வேண்டும்; அப்போதுதான் திமுக கூட்டணி பலவீனமாக இல்லை என்கிற கருத்து ஆழமாக பொதுமக்கள் மனதில் பதியும்; எந்த சலனமும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இல்லை என்பதை மக்களிடத்திலும் கட்சிகளின் தொண்டர்களிடமும் வேரூன்ற வேண்டும் என்ற ஸ்கெட்ச் அடிப்படையிலேயே திமுக தலைமைதான் ஒவ்வொரு கூட்டணி கட்சியையும் களமிறக்கி இருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+