மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு.. திமுக கூட்டணி கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று மத்திய அமைச்சர் கூறியதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை உள்ளிட்டவற்றை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி நாளை மாலை சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் தான் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய அரசு தமிழகத்திற்கான கல்வி நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து வந்தார். முதல்வர் ஸ்டாலினும் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

Three-language policy DMK protest

இப்போது எல்லாம் பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரை கூட வாசிப்பதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஆதரித்தால் தான் கல்வி நிதியை வழங்குவதாக கூறுவது ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியை விடுவிப்பதாக கூறியிருக்கிறார்.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசை விமர்சித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு எதிராக நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

நாளை மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முடிவு எடுத்துள்ளனர். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்போம் என்றும், ஒன்றிணைவோம், உரக்க குரல் எழுப்புவோம்.. உரிமைகளை மீட்போம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மும்மொழி கொள்கை மட்டுமின்றி மத்திய பட்ஜெட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "தமிழகத்தின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதியை தருவதில் பாரபட்சம், பதவிக்காலம் முடிந்த ஆளுநரை வைத்துக்கொண்டு அத்துமீறலில் ஈடுபடுவது, மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது என தமிழகத்தை வஞ்சிக்கும் செயலிலேயே ஈடுபடுகிறது.

இந்த வஞ்சக செயலில் ஈடுபட முயற்சிக்கும் பாஜக அரசை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழகத்தை வீழ்த்திட மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும், வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். மத்திய பாஜக அரசை கண்டித்து முதல்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+