56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த நிலையில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது.

dmk vck

புதிதாக கட்சி தொடங்கிய சசிகலா, ராமதாஸ் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பாமக யாருக்கு என்ற உரிமை குறித்த வழக்கையும் ராமதாஸ் நடத்தி வருகிறார். எனவே இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவும்.

இதில் நாம் தமிழர் சீமான் மட்டும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இன்று முதல் திருத்தணி முருகன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார். தவெகவும் விருப்பமனு பெற்றவர்களிடம் நேர்காணலை நடத்தி முடித்துவிட்டது.

அது போல் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கி சில கட்சிகளுடன் உடன்படிக்கையும் நடந்துவிட்டது.

திமுக கூட்டணியில் முதலில் எந்தெந்த கட்சிகள் இணைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.

1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. தேமுதிக
9. மனிதநேய மக்கள் கட்சி
10. மக்கள் நீதி மய்யம்
11. மக்கள் விடுதலை கட்சி
12. ஆதித்தமிழர் பேரவை
13. அகில இந்திய பார்வர்டு பிளாக்
14. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
15. எஸ்டிபிஐ
16. மனிதநேய ஜனநாயகக் கட்சி
17. முக்குலத்தோர் புலிப்படை
18. கொங்கு இளைஞர் பேரவை
19. திராவிட வெற்றிக் கழகம்
20. புதிய திராவிட கழகம்
21. ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழு முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அதன்பிறகு இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.

காங்கிரஸ் - 28 தொகுதிகள்
மதிமுக - 4 தொகுதிகள்
மமக- 2 தொகுதிகள்
ஐயூஎம்எல்- 2 தொகுதிகள்
கொமதேக- 2 தொகுதிகள்
கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள்
மார்க்சிஸ்ட்- 5 தொகுதிகள்
விசிக- 8 தொகுதிகள்

ஆக மொத்தம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க, குறைந்த தொகுதியிலேயே போட்டியிட திருமாவளவன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

அந்த வகையில் அவர்களுக்கு கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதலாக 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 6 தனி தொகுதிகளும் 2 பொதுத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இன்று, நாளைக்குள் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மஜக, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+