திமுக க்ளீன் ஸ்வைப்.. 2வது முறை ஆட்சி! கலைஞர் செய்யாததை செய்யும் ஸ்டாலின்! அக்னி நியூஸ் கணிப்பு
சென்னை: சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிறைவடைந்து நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் அக்னி நியூஸ் சர்வீசஸ் கணித்துள்ளது. திமுக கூட்டணி 169 தொகுதிகளில் வெற்றி பெறும், அதிமுக 64 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெறும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் கணித்துள்ளது. தவெக ஒரே ஒரு தொகுதியில் வெல்லும் எனவும் அக்னி நியூஸ் சர்வீசஸ் கணித்துள்ளத். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் திமுக கூட்டணி 169 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான Agni News Services வெளியிட்டுள்ள கணிப்பின்படி, திமுக கூட்டணி மொத்தம் 234 தொகுதிகளில் 169 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சுமார் 64 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜயின் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் திமுக கூட்டணி 169 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறப்படுவது, மீண்டும் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தவிர இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும் மேற்குவங்கம் மாநிலத்திற்கு முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதற்கிடையில் கூட்டணி கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை, சீட் ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என களம் சூடுபிடித்தது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்தது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் நடந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்குபதிவுகள் பதிவாகியிருந்தன. கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications