பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணி அமைத்து திமுக உட்பட எந்தக் கட்சியும் வென்றதே இல்லை என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி அமைத்து 2001ல் போட்டியிட்ட திமுகவும் தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய டிகேஎஸ் இளங்கோவன், விஜய் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது எங்களுக்கு நல்லதுதான் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாகவே என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைக்க விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது. அதற்கேற்ப விஜய் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. அதில் 132 பேரில் சுமார் 98 மாவட்டச் செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று எழுத்துப் பூர்வமாக ஆதரவு கொடுத்தனர்.

DMK Alliance

இதனால் பாஜக உடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று சொல்லப்படுகிறது. தவெகவுக்கு சுமார் 50 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி அளிப்பதாகவும் பேசப்பட்டது. அதேபோல் என்டிஏ கூட்டணியில் தவெக இணைந்தால், அது திமுகவுக்கு பின்னடைவாக அமையும் என்றும் கருதப்பட்டது.

இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், வாக்காளர்களை எப்படி அணுக வேண்டும், SIR பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கட்டாயமாக இதுவரை நடந்த எல்லா தேர்தலில்களிலும் திமுக வேட்பாளர், கூட்டணி வேட்பாளர் என்ற பாரபட்சம் பார்க்கப்பட்டதில்லை. அப்படி பாரபட்சமாக செயல்பட்டிருந்தால், லோக்சபாவில் 40க்கு 40 வென்றிருக்க மாட்டோம். திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களாகவே கருதி பணியாற்றி வருகிறோம். திமுகவில் விருப்ப மனு கொடுத்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்படும்.

அந்த தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு இருந்தால், அதனையும் அவர்களிடம் எடுத்து கூறுவோம். அதேபோல் பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால், அது திமுகவுக்கு நல்லதுதான். ஏனென்றால் பாஜக உடன் கூட்டணி அமைத்து யாரும் வென்றதே இல்லை.. திமுகவை சேர்த்தே சொல்கிறேன்.. பாஜக உடன் கூட்டணி அமைத்து 2001ல் திமுகவே தோல்வி அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+