மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்
சென்னை: திமுக கூட்டணியில் (DMK Alliance) வைகோவின் மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மதிமுக 8 விருப்ப தொகுதிகளையும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 3 விருப்ப தொகுதிகளின் பட்டியலையும் வழங்கி அதில் இருந்து சீட் ஒதுக்கும்படி திமுகவிடம் கோரியுள்ளது. அதுபற்றிய முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விசிக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் சவால் உள்ளது.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தொகுதி பங்கீடு முடிந்த கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் விருப்ப தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமயைிடம் வழங்கி வருகிறது.
மதிமுகவிற்கு 4 தொகுதிகள்
அந்த வகையில், திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுகவுக்கு மொத்தம் 4 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளை பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தற்போது திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் மதிமுக உள்பட பல கட்சிகளுக்கு கூட்டணி குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த முறை மதிமுகவுக்கு 2 தொகுதிகளை திமுக குறைத்து வெறும் 4 தொகுதிகளை மட்டுமே வழங்கி உள்ளது.
மதிமுகவின் விருப்ப தொகுதிகள்
அதன்படி மதிமுக சார்பில் தற்போது மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, பல்லடம், கிணத்துக்கடவு உள்ளிட்ட 9 தொகுதிகளில் 4 இடங்களை ஒதுக்கும்படி திமுகவிடம் விருப்ப பட்டியலை வழங்கி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மதிமுக வென்றது. ஆனால் அதில் தற்போது மதுரை தெற்கு, சாத்தூர் தொகுதிகளை மட்டுமே மதிமுக கோரியுள்ளது. வாசுதேவல்லூர், அரியலூர் தொகுதிகளை கைவிட்டுள்ளது. இது முக்கிய விஷயமாகும்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
அதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக 2 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. கடந்த முறை 3 தொகுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெறவில்லை. இதனால் இந்த முறை ஒன்றை குறைத்து 2 வழங்கி உள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதி
இந்நிலையில் தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தென்காசி மாவட்டம் கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட 3 தொகுதிகளின் பட்டியைல வழங்கி அதில் 2 இடங்களை கேட்டுள்ளது.
இந்த 3 தொகுதிகளிலும் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் உள்ளன. இதனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இந்த தொகுதிகளை திமுகவிடம் விருப்பமாக கேட்டுள்ளன.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications