திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதி? ஸ்டாலினின் வியூகம் என்ன? 4 நாளில் பேச்சை தொடங்கும் குழு
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்த ஆலோசனையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது. திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே தான் அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும். இந்த குழுவினர் தோழமை கட்சியினருடன் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் ஆலோசனை
அந்த வகையில் இன்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கனிமொழி பங்கேற்பு
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எவ வேலு, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அறிவிக்கப்படும். அந்த குழுவை சேர்ந்தவர்கள் பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வார்கள்.
ஆலோசனை செய்தது என்ன?
இந்த ஆலோசனையில் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெறும் தலைவர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி வழங்கலாம்.
முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கலாம்? என்பது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஒருவேளை காங்கிரஸ் கட்சி இறங்கி வராவிட்டால் என்ன செய்வது? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்டவை உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பற்றி திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
காங்., அதிருப்திக்கு முற்றுப்புள்ளி
இதில் காங்கிரஸ் சார்பில் தொகுதி பங்கீட்டுக்கு தனியாக குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக தொகுதி பங்கீடு பற்றி பேசாமல் தாமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து திமுக காலதாமதம் செய்த நிலையில் கூடுதல் தொகுதி வேண்டும்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பினர்.
இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தொகுதி பங்கீ்ட்டு குழு பிப்ரவரி 22ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று திமுக அறிவித்த நிலையில் அந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்னும் 4 நாட்களில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்று திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தனித்தனியே தோழமை கட்சிகளுடன் பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உள்ளது.
-
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்?












Click it and Unblock the Notifications