முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்
சென்னை: திமுக கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் முதல் விக்கெட் விழுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையேயான பிரச்சனை என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மார்ச் மாதம் தொடக்கம் வரை நன்றாக சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியில் தற்போது புயல் வீச தொடங்கி உள்ளது. திருமாவளவனின் விசிக, 2 கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால் இந்த கூட்டணி கட்சிகளுக்கு இன்னும் திமுக தொகுதி பங்கீடு முடியவில்லை.

திமுக கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கி உள்ளதோடு, சட்டசபை தேர்தலில் 6 முதல் 8 சீட் வழங்குவதாக கூறப்படுவது தான் இந்த கட்சிகளை அதிருப்தியாக்கி உள்ளது. காலம் காலமாக கூட்டணியில் இருக்கும் தங்களை விட அதிகமாக தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுகிறதே? என்பது தான் விசிக, 2 கம்யூனிஸ்ட்டுகளை கோபப்படுத்தி உள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
அதிலும் குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் ஒரு படி மேலே சென்று பேசியுள்ளார். திமுக கூட்டணிக்கு 'குட்பை' சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வார்னிங் செய்துள்ளார். இதுபற்றி அவர், ''நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.
ஆனால், இப்போது வரை கூடுதல் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கபெறவில்லை. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்'' என கூறியுள்ளார்.
முதல் விக்கெட்டா?
இதனால் திமுக கூட்டணியில் முதல் விக்கெட்டாக தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சட்டசபையில் அவர் அடிக்கடி திமுகவினரை சீண்டும் வகையில் பேசி வந்த நிலையில் தற்போது கூட்டணியை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளார்.
வேல்முருகன் எத்தனை தொகுதி கேட்டார்?
இந்நிலையில் தான் வேல்முருகனின் இந்த அதிருப்தியின் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது கடந்த முறை வேல்முருகன் கட்சிக்கு திமுக ஒரு சட்டசபை தொகுதியை ஒதுக்கியது. பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் 2 தொகுதிகளை கேட்டுள்ளார். ஆனால் திமுக கடந்த முறையை போல் ஒரு தொகுதி வழங்க மட்டுமே முன்வந்துள்ளது. இதனால் அவர் அதிருப்தியாகி உள்ளது.
நாடாளுமன்ற சீட்டும் இல்லையே
மேலும் கடந்த 2019, 2024 லோக்சபா தேர்தலின்போது ஒரு தொகுதியை வேல்முருகன் கோரினார். ஆனால் திமுக வழங்கவில்லை. உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்களை தருவதாக கூறி சமாதானம் செய்தது. ஆனால் அந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததால் வேல்முருகன் கோபமடைந்துள்ளார.
10 முக்கிய டிமாண்ட்
இதுதவிர ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல், மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஈழ தமிழர்களை விடுவித்து சொந்த நாட்டுக்கு அனுப்புதல், சுங்க கட்டணத்தை ரத்து செய்தல் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக கூட்டணியில் வேல்முருகன்?
மேலும் வேல்முருகன் விரைவில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால் திமுகவுக்கு கடலூர், விழுப்புரம் உள்பட இன்னும் சில வட மாவட்டங்களில் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்படலாம். வேல்முருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இதனால் வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதிகளில் லேசாக அவரது பாதிப்பு இருக்கலாம். அதேவேளையில் அதிமுக - பாஜக கூட்டணியில் அவர் இணைந்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். ஏனென்றால் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் உள்ளார். அவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் வேல்முருகனின் வருகை அந்த சமுதயா ஓட்டுகளை மொத்தமாக என்டிஏ கூட்டணிக்கு வரும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்
















Click it and Unblock the Notifications