உதயசூரியனில் வென்ற ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு 'கொங்கு நாட்டு முதல்வரே' பட்டம்... திகுதிகு திமுக
சென்னை: திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வான ஈஸ்வரனுக்கு கொங்குநாட்டு முதல்வரே என பட்டம் சூட்டி கோவை பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. இது கோவை மாவட்ட திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
மத்திய இணை அமைச்சராக எல். முருகன் பதவியேற்ற நாளில் மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் சர்ச்சைகளின் தொடக்கமானது.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரித்து வருகின்றனர். பாஜகவின் சில மாவட்டங்களிலும் கொங்கு நாடு தனி மாநிலம் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கொங்கு நாடு எதிர்ப்பு
ஆனால் கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிடுகிறது; இதற்கு பதிலடி தரும் வகையில்தான் கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றுவோம் என மறைமுகமாக மத்திய அரசு மிரட்டுகிறது என்கிற கருத்தையும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

ஈஸரவனுக்கு கொங்கு நாடு முதல்வர் பட்டம்
இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரனுக்கு கொங்கு நாட்டு முதல்வரே என பட்டம் சூட்டி சுவர் எழுத்துகள் கோவை மாவட்ட பகுதிகளில் எழுதப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

ஈஸ்வரன் திமுக எம்.எல்.ஏ.
அத்துடன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் ஈஸ்வரன் வென்றார். அதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகத்தான் கொங்கு ஈஸ்வரன் இருக்கிறார். ஆனால் அவரது கட்சியினரோ, கொங்கு நாட்டு முதல்வரே என பட்டம் கொடுத்து சுவர் எழுத்து எழுதி வருகின்றனர்.

அதிர்ச்சியில் திமுக
ஈஸ்வரன் கட்சியின் இந்த போக்கு திமுகவினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கோவை மாவட்ட திமுகவினர் கொண்டு சென்றுள்ளனர். கொங்குநாடு தனி மாநில கோரிக்கையை ஈஸ்வரன் வலியுறுத்தி வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது அவரது கட்சியினரின் கொங்கு நாட்டு முதல்வரே பட்டத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு விதைக்கப்பட்டுள்ளது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications