விஜய்க்கு அரசியல் தெரியாது என்று தவறாக கணித்த திமுக, அதிமுக.. அண்ணாமலை பாணியில் கூட்டி கழிச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234. இதில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவையாகும். ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பலம் நேற்று வரை 107 ஆக இருந்தது. தற்போது நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவெகவின் தனி நபர் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்லாமல் சொந்தமாகப் பெரும்பான்மையை எட்ட இன்னும் 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; ஆனால் தற்போது 5 தொகுதிகள் மட்டுமே காலியாக உள்ளன.

கடந்த 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், பின்னர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தவெகவின் பலம் 107 ஆகக் குறைந்ததோடு, சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் பலமும் 233 ஆக மாறியது.

DMK

இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர் அடுத்தடுத்துத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் மதுராந்தகம், தாராபுரம், கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 6 தொகுதிகள் காலியாகின. இதில் கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றதால், அக்கட்சியின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சட்டசபையின் மொத்த பலம் 229 ஆக உள்ளது.

சட்டசபையின் பலம் 229 ஆக இருக்கும் பட்சத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 115 இடங்கள் தேவைப்படுகின்றன. தவெக தற்போது 109 இடங்களில் வென்றுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (5), விசிக (2), ஐயுஎம்எல் (2), இடதுசாரிகள் (4) ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணிப் பலம் 122 ஆக வலுவாக உள்ளது. ஒருவேளை இடதுசாரிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட, தவெக அரசுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.

ஏனெனில் பெரும்பான்மையை நிரூபிக்க 115 இடங்களே தேவை என்ற நிலையில், கம்யூனிஸ்டுகள் விலகினாலும் தவெக கூட்டணிக்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு நீடிக்கும். அடுத்ததாகத் தேர்தல் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் பட்சத்தில், அக்கட்சியின் சொந்த பலம் 114 ஆக உயர்ந்துவிடும். அப்படி உயர்ந்தால், காங்கிரஸ் கட்சி மட்டும் ஆதரவு தந்தாலே தவெகவால் ஆட்சியைத் தடையின்றித் தொடர முடியும்.

தற்போதைய நிலையில் விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்று அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. இதனால் ஆட்சியைத் தக்கவைக்கத் தவெக தலைவர் விஜய் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய அவசியமிருக்காது. மேலும், அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரும் தவெக பக்கம் தாவத் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதால், தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் வெளியேற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ஒருவேளை பாமக, தவெக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறலாம் அல்லது அனுசரித்துப் போகலாம். எவ்வாறாயினும், தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால், "காலம் காத்திருந்தே பதில் சொல்லும்."

அதேநேரம் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று அதிமுகவும், திமுகவும் ஒரு காலத்தில் நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் அவர் பக்கவாக அரசியல் செய்து தான் ஆட்சிக்கு வந்துள்ளார். இடைத்தேர்தலில் வென்றதிலும் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. மெஜாரிட்டி நம்பரை அடைய சரியான திட்டமிடலுடன் பயணிக்கிறார். ஒருபக்கம் திமுக கூட்டணியை மொத்தமாக உடைத்து, மறுபக்கம் அதிமுக தலைவர்களை தன்பக்கம் இழுத்து ஆட்சி நடத்தி வரும் விஜய், தனிமெஜாரிட்டி என்ற தனிப்பெரும் இலக்கில் இப்போது ஓரளவு வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளால், அதிமுகவில் ஏற்பட போகும் சலசலப்புகள் எல்லாமே தவெகவிற்கே சாதகமாக முடியும் என்பதால், அடுத்து நடக்க உள்ள அரசியல் நகர்வுகள் எல்லாமே விஜய்க்கு சாதமாக இருக்கிறது. இதுதான் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+