திமுகவின் வாட்ஸ் அப் குரூப் DMK4TN 207... ஆக 207 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி?
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப் DMK4TN 207 என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பார்த்தால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 207 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என தெரிகிறது.
சட்டசபை தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, மநீம, நாம் தமிழர் கட்சிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. அதிமுக முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
திமுக நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தி முதல் கட்ட பிரசார வியூகத்தை அறிவித்தது. 19 நாட்களில் 16,000 கிராமசபை கூட்டங்கள் என்ற அதிரடியுடன் திமுக பிரசாரத்தில் குதித்திருக்கிறது. அதே கோதாவில் www.werejectadmk.com என்ற இணையதளத்தையும் தொடங்கி அதிமுக அரசுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது திமுக.

அதிமுக அரசுக்கு எதிரான பிரசாரம்
இந்த இணையத்தில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ் அப் குரூப்பின் பெயர் நேற்று DMK4TN 183 என்பதாக நேற்று இருந்தது. ஆனால் சென்னையில் நிர்வாகிகளிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிஷன் 200 என்ற அடிப்படையில் 200 தொகுதிகளுக்கு ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது என எச்சரித்திருந்தார்.

திமுக வாட்ஸ் அப் குரூப்
அதேநேரத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் 183 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திமுக 183 தொகுதிகளில் போட்டியிட்டு எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குகிறதா? அல்லது 200 தொகுதிகளில் போட்டியிட்டு எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

வாட்ஸ் அப் குரூப் பெயர் மாற்றம்
இந்த நிலையில் DMK4TN 183 என்ற வாட்ஸ் அப் குரூப்பின் பெயர் இன்று DMK4TN 207 என மாற்றப்பட்டுள்ளது. இது திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் 207 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடக் கூடும் என்பதை குறிப்பதாகவே கருதப்படுகிறது.

அந்த 27 தொகுதிகள்?
அப்படி எனில் எஞ்சிய 27 தொகுதிகளில் எந்த கூட்டணி கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறது? ஒருவேளை கூட்டணி கட்சிகளின் சரிபாதி இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் நின்றாக வேண்டும் என திமுக நெருக்கடி கொடுத்துள்ளதா? என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications