சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்!
சென்னை:அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் ஒன்றும் செய்யமுடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது என்றும் சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிக்கையின் சிறந்த கடமையாக இருக்க முடியும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, கட்சி ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுப்பது என்பது தவிர்க்க முடியாதது. அதிமுக பாண்டவர் அணி. பாண்டவர் அணியான எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது.
துரோகமும் துரோகமும் ஒன்று சேர்ந்துள்ளது. யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும். அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும்.
திமுகவும், அமமுகவும் குழப்பத்தில் உள்ளது. எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. சகுனியும் துரியோதனன் கும்பலும் தான் தற்போது ஒன்று சேர்ந்துள்ளது. மே 23ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications