பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து விளையாடுகிறார்கள்.. திமுக, பாஜவை விளாசிய தவெக விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்மொழி கொள்கை விஷயத்தில் பாசிசமும், பாயாசமும் பேசி வைத்து செட்டிங் செய்துகொண்டு மாற்றி மாற்றி விளையாடுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார். எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வார்களே.. அதுபோல செய்துகொண்டிருக்கிறார்கள் என்று மத்திய, மாநில அரசுகளை மறைமுகமாக விஜய் விமர்சித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. இதில் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கட்சி தலைவர் விஜய், மும்மொழி கொள்கை விஷயத்தில் பாசிசமும், பாயாசமும் பேசி வைத்து செட்டிங் செய்துகொண்டு மாற்றி மாற்றி விளையாடுகிறார்கள் என்று பேசினார்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

பாசிசமும், பாயாசமும்

விஜய் பேசியதாவது:- மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டார்களாம். இந்த எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வார்களே.. அதுபோல.. கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. இதை எப்படியாவது வாங்க வேண்டியது என்பது இவர்களுடைய உரிமை.

ஆனால் இவங்க இரண்டு பேரும், இவ்வளவு பெரிய சீரியஸான விஷயம் நடந்துகொண்டிருக்கும் போது, அதான் நம்ம பாசிசமும், பாயாசமும்.. அதாங்க நம்ம அரசியல் எதிரியும்.. கொள்கை எதிரியும் என்ன பண்றாங்க என்றால், பேசி வைத்துக் கொண்டு.. இரண்டு பேரும் செட்டிங்க் செஞ்சுக்கொண்டு மாத்தி மாத்தி சோசியல் மீடியாக்களில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள்.

அரசியல் என்றாலே வேற லெவல் தான்

இங்க என்ன நடந்துகொண்டிருக்கிறது. அதாவது இவங்க இரண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கொள்வாங்களாம். இதை நாம நம்பனுமாம். இந்த இரண்டுக்கும் நடுவில நம்ம பசங்க புகுந்து சைலண்டா சம்பவம் செஞ்சுட்டு போயிட்றாங்க.. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விஜய் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. தோழிகளே.. எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான்ல.. ஏனென்றால் இந்த அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்க முடியும். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்றும் சொல்லவே முடியாது. கணிக்கவே முடியாது.

கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும்

அதனால் தான் அரசியலில் மட்டும் எல்லாரும் ஒன்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்ல என்று சொல்வார்கள். அப்படித்தான் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும், ஜனநாயக உரிமை என்றும் சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒருத்தர் வந்தால் அதனை கண்டிப்பாக நல்லவர்கள் எல்லாரும் வரவேற்பார்கள்.

ஆனால் ஒருசில இந்த அதிகார.. இல்ல அது வேண்டாம்.. ஒருசில பேருக்கும் மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும் தானே. என்னடா இவன் திடீரென்று வந்துட்டானே.. இதுவரை நாம சொன்ன பொய்களை எல்லாம் நம்பிக்கிட்டு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்களே. ஆனால் இப்போ வந்த இவன் சொல்றதெல்லாம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறதே. அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாக இருக்கிறதே. இவனை என்ன பண்ணலாம்.. எப்படி குளோஸ் பண்ணலாம்..

கத்துறதா.. கதறுறதா..

எப்படி இவன குளோஸ் பண்ணுறது என்பதில் ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில கத்துறதா.. கதறுறதா.. என என்ன பண்றத்துன்னு தெரியாம.. வரவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான்னு சொல்லி இப்படி எதாச்சு பேச ஆரம்பிப்பாங்க.. இப்போ நம்ம ஆட்சியில் இருக்கிறவங்க நமக்கு எதிராக பேசுகிறார்கள் அல்லவா. அந்த மாதிரி.. இப்படியொரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல், கொஞ்சம் கூட பயம் இல்லாமல் வருகிற எதிர்ப்புகளை எல்லாம் சும்மா லெஃப்ட் கேண்டில் டீல் பண்ணிக்கிட்டு இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளோம்.

ஒரு அரசியல் கட்சியின் பெரிய பலமே கட்டமைப்பு தான். ஆலமரம் மாதிரி ஒரு கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றால், அதன் விழுதுகளும் வேர்களும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா.. அப்படித்தான், இப்போது நாம் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.. இப்படிப்பட்ட நிலையில் ஒரு கம்ப்ளைண்ட நம்ம மேல.. அது என்னன்னா, நம் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இளைஞர்களாக இருக்கிறார்களாம்..

1967, 1977 ஆம் ஆண்டுகளில்

ஆமா.. இளைஞர்கள் தான்.. அதுக்கு என்ன இப்போ.. அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பிச்ச போது அவர்கள் பின்னாடி இருந்ததும் இளைஞர்கள் தான். எம் ஜி ஆர் கட்சி ஆரம்பிச்சபோதும் அவர்கள் பின்னாடி இருந்தது இளைஞர்கள் தான். இந்த இளைஞர்களால் தான் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அது வரலாறு. இப்போது இன்னொரு கம்ப்ளைண்ட். அது என்னவென்றால், நம் கட்சி நிர்வாகிகள் எல்லாரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாம். அதேதான் இங்கேயும் சொல்கிறேன். ஏன் வரக்கூடாது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் நிறைய பெருசு பெருசா சாதித்து இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நம் கட்சியும் எளிய மக்களுக்கான கட்சி தானே. அப்படி இருக்கும்போது நம் கட்சியை சேர்ந்தவர்களும் எளிமையானவர்களாக தான் இருப்பார்கள். நம்ம கட்சி ஒன்னும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாதுல்ல.. முன்னாடி எல்லாம் பண்ணையார்கள் தான் கட்சியில் இருப்பாங்க.. ஆனால் இப்போ அப்படியே உல்டாவா. இப்போ பதவியில் இருக்கிறவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+